இலங்கை

யாழில் நிறுவப்பட்ட வெளிநாடு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம்

  • July 14, 2023
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்திற்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கான காணியை பெற்றுத்தருமாறு தான் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். மேலும் ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]

இலங்கை

இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிலையங்கள்! ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை எரிபொருளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த முயற்சியில் தற்போது பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை அமைப்பது அடங்கும் […]

இலங்கை

காணாமல் போன சுற்றுலாப் பயணி! வெளியான அதிர்ச்சி தகவல்

பொத்தபிட்டியவில் காணாமல் போன டேனிஷ் சுற்றுலாப் பயணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது மலையேற்றத்தின் போது காணாமல் போன  டேனிஷ் சுற்றுலாப் பயணியின் (32) சடலம் பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின் போது காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் கண்டி அலகல்ல மலைத்தொடரில் இருந்து இலங்கை இராணுவ சிங்கப் படைப்பிரிவின் (11வது பிரிவு) படையினரால் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பெண் சுற்றுலாப் பயணியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில் இது தொடர்பில் போலீசார் […]

பொழுதுபோக்கு

திமுக-வின் ஆதரவோடு தான் வைரமுத்து பெண்களை மிரட்டுகிறார்!! பிரபல பாடகி பகீர் தகவல்

  • July 14, 2023
  • 0 Comments

சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு அப்போது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் பாடகி சின்மயிக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு பெரிய பிரச்சனையே வந்துவிட்டது. அப்போதில் இருந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகிறார் சின்மயி. வைரமுத்துவை பற்றி யார் புகழ்ந்தோ சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டாலோ அவர்களிடம் பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருவார். அப்படி சமீபத்தில் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளுக்கு தமிழ் நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி டிவிட்டரில் […]

இந்தியா

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. எல்விஎம்3எம்-4 ராக்கெட்டில் சந்திரயான்-3 ஏவப்படுவதற்கான 25½ மணி நேர கவுன்டவுன் நேற்று தொடங்கியது. கவுண்ட்டவுனை முடித்து, சந்திரயான் 3 இன்று மதியம் 2:35:17 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளம் 2 இல் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ‘சந்திராயன் 3’ல் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ஜின் 3 முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. ராக்கெட்டின் […]

இலங்கை வட அமெரிக்கா

அமெரிக்காவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த கதி !

  • July 14, 2023
  • 0 Comments

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 34 வயதான ஹசித் நவரத்ன, ஜூலை 2 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். ஹசித் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பெறப்பட்ட வெளிநாட்டு கடனில் பெருமளவானவை வடக்கு, கிழக்கிற்காக; அமைச்சர் பந்துல குணவர்தன

  • July 14, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்த போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன. மேலும் […]

பொழுதுபோக்கு

விஜய் மனைவி சங்கீதா இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?? வெளியானது வீடியோ…

  • July 14, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் அரசியல் நுழைவுக்காக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல விசயங்களை செய்து வருகிறார். தற்போது, கடந்த மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்களை சந்தித்து பல விசயங்களை கூறியிருக்கிறார். இந்நிலையில் விஜய் தன் பெற்றோர்களை கைவிட்டார் என்றும் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறி செய்திகள் வெளியானது. இதற்கு காரணம் விஜய் […]

அறிந்திருக்க வேண்டியவை

நினைத்ததை அடைய ”law of attraction” ஐ இப்படி பயன்படுத்துங்கள் : நிச்சயம் நடக்கும்!

  • July 14, 2023
  • 0 Comments

நாம் நினைக்கும் காரியங்கள், அல்லது எங்களுடைய எண்ணங்கள் ஈடேறுவதற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் இடையில் ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? பொதுவாக எங்களுடைய எண்ணங்கள் எல்லாம் சிறந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் எங்களுடைய எண்ணங்கள் தான் பிற்காலத்தில் செயல்களாக உருமாறுகிறது. நாம் நினைக்கும்  சிறிய விடயங்கள் கூட ஈர்ப்பு சக்தியின் வலிமையால் நடைபெறுகிறது. உதாராணமாக நீங்கள் யாரையாவது காணவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் […]

இலங்கை

டக்ளஸ் தலைமையில் நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டம்

  • July 14, 2023
  • 0 Comments

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், பிரதேசத்தின் கடல் போக்குவரத்து சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் […]