இலங்கை செய்தி

3000 மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித்தொகை

  • May 3, 2023
  • 0 Comments

  ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் விருது 2023 இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. G.E.C. சாதாரண தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி G.E.C உயர்தரம் கற்கத் தகுதி பெற்ற மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன .இதன்படி, 2022 ஆம் ஆண்டு க.பொ.த பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு கல்வி கற்கத் […]

இந்தியா விளையாட்டு

மழை காரணமாக சமநிலையில் முடிந்த சென்னை லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி

  • May 3, 2023
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை காரணமாக டாஸ் போடுவது சிறிது தாமதம் ஆனது. மழை நின்ற பின்னர் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. லக்னோ அணியில் காயம் காரணமாக கேப்டன் கே.எல்.ராகுல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக குர்ணால் பாண்ட்யா லக்னோ அணியை […]

உலகம் செய்தி

புட்டடின் மீது கொலை முயற்சி

  • May 3, 2023
  • 0 Comments

  ரஷ்ய அதிபர் புடின் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ட்ரோன்களைப் பயன்படுத்தி படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. கிரெம்ளின் அருகே வந்த ஆளில்லா விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய அதிகாரிகள் மின்னணு ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி விமானங்களை சுட்டு வீழ்த்தினர். ஆளில்லா விமானங்களின் பாகங்கள் கிரெம்ளினைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்துள்ளன, ஆனால் குப்பைகள் காரணமாக கட்டிடங்கள் எதுவும் சேதமடையவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் […]

இலங்கை செய்தி

ஸ்ரீ ரங்காவிற்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

  • May 3, 2023
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கடந்த வருடம் ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் சட்டவிரோதமாக ஒன்று கூடியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதற்கு ரங்கா உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்ரீரங்கா சொத்திற்கு சேதம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார் என குற்றம்சாட்டப்படலாம் எனவும் சிஐடியினர் தெரிவித்திருந்தனர். எனினும் ஸ்ரீரங்கா […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

  • May 3, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கைக்கமையவும்  ஏற்கனவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும் வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் காஞ்சன விஜய சேகர தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும்,  ஜூலைக்குள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மின்சாரசபை மறுசீரமைப்புக்களுக்கமைய புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விலை சூத்திரம் 20 ஆண்டுகளுக்கொருமுறை மாறக் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிடும் ரஷ்யா – வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

விளாடிமிர் புட்டினுக்கு எதிரான படுகொலை முயற்சியை முறியடித்ததாக மாஸ்கோ கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, உக்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை உக்ரைனின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நோர்டிக் தலைவர்களை சந்திப்பதற்காக பின்லாந்துக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில், உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி தமிழ்நாடு

மது குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்ற ஆயிரக்கணக்கான பெண்கள்

  • May 3, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வீரக்குடி நாட்டைச் சேர்ந்த கருக்காகுறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுதழுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் மண்டக படிதாரர்களால் செல்லியம்மன் அகோர வீரபத்திரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் பக்தர்கள் […]

ஐரோப்பா செய்தி

கிரெம்ளின் மீதான தாக்குதலை மறுக்கும் உக்ரைன்!

  • May 3, 2023
  • 0 Comments

கிரெம்ளின் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரேனிய ஜனாதிபதியின் மூத்த அதிகாரி ஒருவர், கியிவ் வேலைநிறுத்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் இது குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என்றும்,   என்றும் விளாடிமிர் புடின் மீதான கொலை முயற்சி என்றும் கிரெம்ளின் விமர்சித்துள்ளது.

செய்தி தமிழ்நாடு

தண்ணீர்,மலை உச்சி,சகதி என கராத்தே பயிற்சி

  • May 3, 2023
  • 0 Comments

தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தில் பெருமாள் கராத்தே அகடாமியில் மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக மழை ஏறுதல்,கடல் தண்ணீர் பயிற்சி,வயக்காட்டு சகதியில் கிக்ஸ் பயிற்சி என பல வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கைகளால் செங்கல், ஓடு உடைத்தல் உள்ளிட்ட தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மூத்த […]

செய்தி தமிழ்நாடு

குளிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி

  • May 3, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த அனகாபுத்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி 41. இவர் தனது வீட்டில் குளிக்க சென்றபோது குளிப்பதற்க்காக வெண்ணீர் வைக்க மின்சார கொதிகலன் கருவியை பயன்படுத்தியுள்ளார். அப்போது மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது, இதனை கவனிக்காத தேவி கொதிகலன் கருவியை கையில் எடுத்துள்ளார். அப்போது மின் இனைப்பு வரவே பயங்கரமாக மின்சாரம் தாக்கி குளியல் அறையில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இவரு இரண்டு மகன்கள் உள்ளனர் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். தேவியின் […]

You cannot copy content of this page

Skip to content