இந்தியா

சோனியா காந்தி, ராகுல் காந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மும்பையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு […]

இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் காற்றின் வேகம் அதிகரிக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு […]

பொழுதுபோக்கு

DD விவாகரத்திற்கு காரணம் அந்த ஒரு விஷயம் தான்…. அப்படி என்ன?

  • July 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்சினி. இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி பவர்பாண்டி,சர்வமும் தாளமயம் போன்ற சில படங்களில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். கடந்த 2014 -ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். நடிகை நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் […]

ஐரோப்பா

உணவு கிடைப்பதை அச்சுறுத்தி உலகை மிரட்ட ரஷ்யா முயற்சி! ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டு

கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷ்யாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா பகுதியை இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு தம்பதிகளும் அவர்களது குழந்தையும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை கருங்கடல் வழியாக பாதுகாப்பாக கொண்டு செல்வதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து, உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட […]

பொழுதுபோக்கு

அஸ்வினுக்கு திருமணம்?? மணமகள் யாரா இருக்கும்?

  • July 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் அஸ்வின். பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியான செம்பி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இந்நிலையில் அஸ்வின் பிரபல தயாரிப்பாளர் மகளை விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த பெண் யார் என்ற தகவல் வெளியாகவில்லை

விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் உலக கோப்பை போட்டி! கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக மைதானத்திற்கான விமான டிக்கெட்டுகளுக்கான விலை 350% அதிகரித்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியை நேரில் காண விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் விமான டிக்கெட்டுகளுக்காக அதிகப்படியான தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 15-ம் திகதி […]

இலங்கை

அது இன்னும் பயன்பாட்டில்தான் உள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

  • July 18, 2023
  • 0 Comments

பேராதனை போதனா வைத்தியசாலையில் சமீபத்தில் 21 வயது யுவதியின் மரணத்துக்கு காரணமாக இருந்த மருந்தானது, இன்னும் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ளதாகவும் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த மருந்தின் 66,000 குப்பிகள் கையிருப்பிலுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த மருந்தின் 145,930 குப்பிகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 79,260 குப்பிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த […]

இலங்கை

கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று (ஜூலை 18) முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்களான Prima Ceylon (Pvt.) Ltd. மற்றும் Serendib Flour Mills (Pvt.) Ltd ஆகியவை விலையை  குறைத்துள்ளன. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  

இந்தியா

ஜெய்ப்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

  • July 18, 2023
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று இரவு குழந்தைகள் இருந்த இரண்டு வார்டுகளில் இருந்து புகை வந்தது. இதனைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த வார்டுகளில் இருந்த 30 குழந்தைகளையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். குழந்தைகள் இருந்த வார்டு சமீபத்தில் கட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தக் குழு […]

வட அமெரிக்கா

கட்டுக்கடங்காமல் எரியும் காட்டு தீ – சர்வதேச உதவியை நாடியுள்ள கனடா

  • July 18, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுதீயை அணைக்க ஆயுதப்படைகள் மற்றும் சர்வதேச தீயணைப்பு வீர்ர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கனடா இந்த ஆண்டு மிகவும் மோசமான காட்டுதீ பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. ஆண்டு தொடங்கி தற்போது வரை 1கோடி ஹெக்டர் காட்டுப்பகுதி தீக்கிரையாகி உள்ளது. இதில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மழைப்பொழிவு இல்லாமல் வறண்டுபோயுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் […]