பல கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சுமார் 3,000 உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இறுதியாக 2018ல் சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார் […]