இலங்கை

யாழில் 11மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவை மீட்ட கடற்படையினர்

  • July 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படை முகாமில் வைத்துள்ள கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

துபாயில் சாலைகளை ஸ்கேன் செய்யும் Ai கருவி! ஏன் இப்படி செய்கிறார்கள்?

உலகிலேயே சிறந்த சாலைகளைக் கொண்ட நாடு என்ற ரீதியில் முதலில் நினைவுக்கு வருவது துபாய். அந்த அளவுக்கு சாலைகளை பராமரிப்பதில் வல்லவர்கள். சாலைகளில் பள்ளங்களை காண முடியாது. ஏன், சாலையில் ஒரு சிறு விரிசல் கூட காண முடியாது.அதனால்தான், ஏய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையில் சிறிய விரிசலைக் கூட சரிசெய்ய முயற்சிக்கின்றனர். ஆம், எதிர்காலத்தில் துபாய் சாலைகளில் 1 மிமீ விரிசல் கூட இருக்காது என்று கூறப்படுகிறது. துபாயின் தொலைநோக்குப் பார்வையிலும், நகர்ப்புற மேம்பாட்டிற்கான புதுமையான அணுகுமுறையிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் வட அமெரிக்கா

ChatGPTக்கு போட்டியாக மெட்டா கூட்டு முயற்சியில் உருவாக்கியுள்ள புது AI..!

  • July 19, 2023
  • 0 Comments

Facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா, chatGPTக்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது. ஆராச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் மைக்ரோசோப்ட் உடன் கூட்டு சேர்ந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசோப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீலநிற உடையனிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க பதிவிட்டுள்ளார். லாமா-2 அடுத்த தலைமுறைக்கான […]

இந்தியா

பல் வலிக்கு யூடியூபை பார்த்து வைத்தியம் பார்த்த இளைஞர் மரணம்!

  • July 19, 2023
  • 0 Comments

இந்தியாவில், 26 வயதான இளைஞர் ஒருவர் பல்வலிக்கு யூடியூபை பார்த்து வைத்தியம் பார்த்ததால் உயிரை விட்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், எந்த பிரச்சனை என்றாலும் யூடியூபை பார்த்து தீர்வு கண்டுபிடிப்பது சாதாரண ஒரு விடயமாகி விட்டது.சமூக வலைத்தளங்களில் நல்லதும் இருக்கின்றன, கெட்டதும் இருக்கின்றன. அந்தவகையில், 26 வயதான நபர் தனது பல்வலிக்கு சிகிச்சையளிப்பதற்கு யூடியூப் பார்த்து மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மஹ்தோ என்ற […]

ஆசியா

வடகொரியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்!

  • July 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்திருக்கிறார். தற்போது அவரை கைது செய்துள்ள ராணுவம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் நாட்டாமை நான்தான் என்று கடந்த காலத்தில் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுவரை 81 நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் ‘நேட்டோ’ மூலம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பேஸ்புக் செயலியில் புதிய காணொளி அம்சங்கள்!

பேஸ்புக் செயலியில் காணொளி சார்ந்த அம்சங்களில் பல மாற்றங்களை செய்துள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. வீடியோ எடிட்டிங் கருவிகள், HDR இல் வீடியோக்களை பதிவேற்றும் திறன் மற்றும் வீடியோ டேப் மூலம் பழைய வாட்ச் டேப் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல வீடியோ அம்சங்களுக்கான மேம்படுத்தல்களை Facebook இல் Meta அறிவித்துள்ளது. புதிய எடிட்டிங் கருவிகள் பயனர்கள் தங்கள் வீடியோக்களில் ஒலி அமைவு மற்றும் பயனர்கள் தங்கள் காணொளிகளில் சரியான ஒலியை தடையின்றி இணைக்கலாம். பயனர்கள் தங்கள் வீடியோக்களை டிரிம் […]

இலங்கை

கொட்டகலையில் மாணவர்களின் தலையை குதறிய ஆசிரியர்!

  • July 19, 2023
  • 0 Comments

தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார். முறையாக வெட்டாமல் தலைமுடியை குதறிவிட்டார். இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது. இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சுமார் 3,000 உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இறுதியாக 2018ல் சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார் […]

ஐரோப்பா

ஒடேசா துறைமுகம் மீது தொடர்ந்து 2வது நாளாக ரஷ்யா தாக்குதல்

  • July 19, 2023
  • 0 Comments

ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’ […]

இலங்கை

வேற்றுக்கிரக வாசிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ்

  • July 19, 2023
  • 0 Comments

இலங்ககைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட வேண்டும் என்று சக தமிழ் தலைமைகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(18) நடைபெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான விவாதம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்,”மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கின்ற சர்வதேச ரீதியான அமைப்புக்கள் […]