பிரான்ஸ் ஜனாதிபதிக்கான செலவு தொடர்பில் வெளியான தகவல்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாண்டுக்கான செலவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபத் இம்மானுவல் மக்ரோனுக்கான செலவு 315,808 யூரோக்கள் ஆகும். இந்த தொகையில் ஜனாதிபதிக்கான சிகை அலங்காரம் மற்றும் ஆடைகளுக்கான செலவு சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சிறிய அளவில் இந்த தொகை அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 292.454 யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.