இலங்கை

நீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் பெண்ணின் சடலம் மீட்பு

  • July 23, 2023
  • 0 Comments

நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே அமைந்துள்ள மீனவ துறைமுகம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் காணப்படும் பெண்ணின் உயரம் ஐந்து அடி எனவும் மூக்கின் வழியாக இரத்தம் கசிவதை காண முடிகிறது எனவும் பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் இச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

எரிவாயு விலை சூத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா ஆகிய இரண்டு நிறுவனங்களாலும் விற்பனை செய்யப்படும் திரவப் பெற்றோலியம் (எல்பி) எரிவாயுவின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். பெர்னாண்டோ தனது அறிக்கையின் போது, சந்தையில் லிட்ரோ விலையை விட தற்போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். லாஃப்ஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, எதிர்வரும் வாரத்திற்குள் விலை திருத்தம் தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் உறுதியளித்துள்ளனர். […]

பொழுதுபோக்கு

“சிம்பு அப்படி மாறிவிட்டார், நான் எதிர்பார்க்கவே இல்ல” சந்தானம் அதிர்ச்சி செய்தி

  • July 23, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானத்தின் திறமையை பார்த்து வியந்து போன சிம்பு அவருக்கு தன்னுடைய காதல் அழிவதில்லை படத்தில் காமெடியனாக நடிக்க வாய்ப்பளித்தார். இதையடுத்து தொடர்ந்து சிம்பு உடன் மன்மதன், வல்லவன், வானம் போன்ற படங்களில் பணியாற்றினார் சந்தானம். சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் சந்தானம். அந்த வகையில், […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் மிதமிஞ்சிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள Thomas Cook விமான சேவை!

  • July 23, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக Thomas Cook விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவல் ஏஜென்ட் தாமஸ் இது குறித்த தகவல்களை ஸ்கை நியூஸிற்கு பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் கூறும்போது சுமார் 40 பேர்  தீவின்  லார்டோஸ் மற்றும் கியோடாரி பகுதிகளில் பாதுகாப்பற்ற ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் ரோட்ஸில் காட்டுத் தீயை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் விடுமுறையில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். “எங்கள் குழுக்கள் தற்போது தீவில் உள்ள எங்கள் விடுமுறைக்கு […]

மத்திய கிழக்கு

சூடானில் ரொக்கெட் தாக்குதல் : 16 பேர் பலி!

  • July 23, 2023
  • 0 Comments

சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இது தெற்கு டார்பூர் மாநிலத்தின் தலைநகரான நயாலாவில் நடந்ததாகவும்,   மேற்கு டார்ஃபூரில் உள்ள மக்களை குறிவைத்து துப்பாக்கி சுடும் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் எல்லையைத் தாண்டி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. சூடானில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இராணுவத்தினருக்கும், […]

ஐரோப்பா

போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த இறுதி சடங்கு வாகனம்;முகமூடி அணிந்த 4பேர் கைது!

  • July 23, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் கேட்ஸ்ஹெட் பகுதியில் உள்ள மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் போது இறுதி சடங்கு வாகனத்துடன் நுழைந்த 4 முகமூடி அணிந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை டன்ஸ்டன் கால்பந்து அணிக்கும் கேட்ஸ்ஹெட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி கேட்ஸ்ஹெட் பகுதியில் உள்ள UTS மைதானத்தில் நடைபெற்றது.ஆட்டத்தின் பாதி நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில் திடீரென முகமூடி அணிந்த 4 மர்ம […]

இலங்கை

போதிய அளவான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – காஞ்சன விஜேசேகர!

  • July 23, 2023
  • 0 Comments

அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் 35,402 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் 5367 மெற்றிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோலும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இன்று (23.07) […]

இந்தியா

மணிப்பூர் கொடூரங்கள்; உயிருடன் கொளுத்தப்பட்ட சுதந்திர தியாகியின் மனைவி!

  • July 23, 2023
  • 0 Comments

இந்திய மாகாணம் மணிப்பூரில் இருந்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் கற்பனை செய்ய முடியாத திகில் சம்பவங்கள் என்றே கூறுகின்றனர். வன்முறை குழு ஒன்றால் பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தப்பட்ட சம்பவமும், பணியிடத்தில் பதுங்கியிருந்த இரு இளம் பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியதும், எதிர்த்து போராடிய ஆண்களை அடித்தே கொன்றுள்ளதும் மட்டுமின்றி, வெளிவராத பல பகீர் சம்பவங்களும் மணிப்பூரில் நடந்தேறி வருகிறது. இந்த நிலையில், Kakching மாவட்டத்தில் Serou கிராமத்தில் 80 வயது பெண்மணி ஒருவரை, அதுவும் […]

ஆசியா

தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து -17 பேர் உயிரிழப்பு!

  • July 23, 2023
  • 0 Comments

பங்களாதேஷின் சத்திரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து ஒன்று கவிழந்து விபத்துகுள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூவர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதுன்இ 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் கொள்ளளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசியா

மங்கோலியாவில் தீவிரமாக பரவிவரும் கொடிய நோ் -எச்சரித்துள்ள சுகாதாரத் துறை

  • July 23, 2023
  • 0 Comments

கிழக்கு ஆசியா நாடான மங்கோலியாவில் கடந்த சில நாட்களாக பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது. மங்கோலியாவில் மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது.அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு மங்கோலியாவின் சவ்கான் மாகாணத்தில் ஏராளமான மர்மோத்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் சில மர்மோத்களின் மாதிரியை எடுத்து நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு அவை […]