ஜப்பானில் ரயிலில் தாக்குதல் நடத்திய நபர் கைது!
ஜப்பானில் ரயிலுக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு ரயில்வே அதிகாரி மற்றும் இரண்டு பயணிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் தாக்குதல்தாரியை ஜப்பானிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.