இலங்கை

ரஷ்ய தம்பதியைக் காப்பாற்ற முயன்ற உயிர்காப்பாளருக்கு நேர்ந்த துயரம்!

வஸ்கடுவ கடற்பரப்பில் பலத்த நீரோட்டம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதியரை காப்பாற்ற முற்பட்ட 36 வயதுடைய உயிர்காப்பாளர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அதன்படி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இறந்தவர், ரஷ்யப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தம்பதியைக் காப்பாற்ற முயன்றார். இருப்பினும், அவர் மேலும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார், அதன் பிறகு மற்ற இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் மூவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் அடித்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். […]

பொழுதுபோக்கு

அட சூப்பர் ஸ்டார் சீரியல் பாக்குறாரா? அதுவும் டிஆர்பியை எகிரவிட்ட இந்த சீரியலா?

  • July 23, 2023
  • 0 Comments

தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் ஒரே நாடகம் என்றால் அது சன் டிவியில் வருகின்ற எதிர்நீச்சல் சீரியல்தான். அதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு பிடித்த மாதிரி விறுவிறுப்பாக கதைகள் அமைவது தான். அத்துடன் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த ஒத்த நாடகம் தான் சன் டிவியில் மொத்த டிஆர்பி ரேட்டையும் அதிகரித்து இருக்கிறது. அதனாலேயே இதுவரை ஆறு நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி இருந்த இந்த நாடகம் தற்போது ஞாயிற்றுக் கிழமையும் […]

ஐரோப்பா

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு இத்தாலி பிரதமர் அழைப்பு!

  • July 23, 2023
  • 0 Comments

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார். ரோமில் இன்று (23.07) நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “ஐரோப்பா மற்றும் இத்தாலிக்கு குடியேற்றம் தேவைப்படுபவர்களுக்கு சட்டப்பூர்வ வழிகள் திறந்திருப்பதாக தெரிவித்தார். “திரளான சட்டவிரோத குடியேற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தீங்கு விளைவிக்கிறது எனவும் மிகவும் பலவீனமானவர்களின் செலவில் பணக்காரர்களாகும் குழுக்கள் இருப்பதாகவும் அவர் […]

வாழ்வியல்

கோப்பி பிரியரா நீங்கள்! அப்போ கட்டாயம் இது உங்களுக்கு தெரிந்து இருக்கனும்

ஜப்பானில் ஒரு சமீபத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பதற்கும் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இறப்பு விகிதங்கள் அதிகரிப்பதற்கும் இடையே தொடர்பைக் கண்டறிந்துள்ளது. 18,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கி கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது. 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. அத்துடன் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு […]

வாழ்வியல்

குழந்தைகளை சமாளிக்க ஸ்மார்ட் ஃபோன்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!

  • July 23, 2023
  • 0 Comments

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அழுதாலும் சரி அல்லது அவர்கள் குழப்படி செய்யாமல் இருப்பதற்கும் சரி ஸ்மார்ட் தொலைப்பேசிகளை கொடுத்துவிடுகிறோம். அவர்களும் தொலைப்பேசிக்காகவே அடம்பிடிப்பதும் உண்டு. இப்போது இளைஞர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், குழந்தைகளின் மத்திலும் கூட ஸ்மார்ட தொலைப்பேசிகளின் பாவனை அதிகமாகவே உள்ளது. இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீண்டகாலத்திற்க இருக்கும். அப்படி என்ன என்ன பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்மார்ட் ஃபோன் பாவனையால் அதிகம் பாதிக்கப்படுவது கண்தான். ஃபோன் திரைகளில் இருக்கும் ஒளி இலகுவாக […]

இலங்கை

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி! அப்படி என்ன செய்தார்?

நுவரெலியா கொட்டகலையைச் சேர்ந்த பவிஷ்னா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் international book of world record) இடம்பிடித்துள்ளார். நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த செந்தில்குமார், ரேவதி தம்பதியின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார். உலக சாதனை புத்தக நிறுவனம் இந்த சிறுமியின் திறமை மற்றும் அசாதாரன நினைவாற்றலை கருத்தில் கொண்டு உலக சாதனை புத்தகத்தில் […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானம்!

  • July 23, 2023
  • 0 Comments

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக உரிய முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை எனவும், முட்டையின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இந்தியா

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை

2019 ஆம் ஆண்டு பாமக முன்னாள் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். PFI மற்றும் SDPI இன் 18 உறுப்பினர்கள் UAPA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர், அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை […]

இந்தியா ஐரோப்பா

புகழ்பெற்ற ஹனோவர் லாட்ஜ் மாளிகையை 1200 கோடிக்கு வாங்கிய இந்தியர்!

  • July 23, 2023
  • 0 Comments

லண்டனில் சுமார் ரூ.1200 கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகை ஒன்றை இந்தியாவை சேர்ந்த ரவி ரூயா என்ற கோடீஸ்வரர் வாங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் பிரம்மாண்ட சொகுசு வீடுகளுக்கான சந்தை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரவி ரூயா, லண்டனில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். 1827ம் ஆண்டு கட்டப்பட்டு தொடர்ந்து […]

இலங்கை

அடுத்த மாதத்தில் எரிபொருட்களுக்கான விலை குறைவடையும்?

  • July 23, 2023
  • 0 Comments

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் மொத்த எரிபொருளும்  இலங்கையை வந்தடையும் என எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த மாதம் முதல் வாரத்தில், சினோபெக்கிலிருந்து முதல் இரண்டு ஷிப்மென்ட்கள் வந்து சேரும். பிறகு, முதல் மாதத்திற்குள் CPC-யில் […]