இலங்கை

அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

  • July 26, 2023
  • 0 Comments

அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இன்று (26.07) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரச நிர்வாக செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வசும தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது  முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரகக் கோட்பாட்டுக்கு ஒரே மாதிரியான கொடுப்பனவுகளை அமுல்படுத்துவது குறித்தும், எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது […]

பொழுதுபோக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் விழா ரத்து… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

  • July 26, 2023
  • 0 Comments

ஜெயிலர் படம் ரிலிஸ் திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ஆடியோ லான்ஜ்க்கு டிக்கட் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதிர்ச்சி செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜெயிலர் படம் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. எனவே நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் ரஜினிக்கு ஒரு கம்பேக் கொடுத்து தானும் மீண்டு வருவார் என ரசிகர்கள் கருதுகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற […]

உலகம்

எதிர்காலத்தில் மலிவு விலையில் கிடைக்கும் ஏஐ தொழிநுட்பம்!

  • July 26, 2023
  • 0 Comments

AI தொழிநுட்பம் எதிர்காலத்தில், எளிதில் அணுகவும், மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றியபோது, ​​அதன் திறன்கள் குறித்து அற்புதமாக உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  செயற்கை நுண்ணறிவு கருவிகள் அல்லது சாட்போட்கள் ஒரு குழந்தைக்கு 18 மாதங்களுக்குள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் கல்விக்கான தொழில்நுட்பத்தின் முன்னோடியில்லாத பயன்பாடு […]

இலங்கை

நிகழ்ச்சி நிரல் குறித்து எனக்குத் தெரியாது – எஸ்.எம். சந்திரசேன

  • July 26, 2023
  • 0 Comments

இன்று மதியம் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறியவில்லை என SLPP இன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். ஓர் அரசியல் கட்சியாக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அழைத்துள்ளார். “நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். ஆனால் நிகழ்ச்சி நிரல் பற்றி எனக்கு சரியாகத் தெரியது” என அவர் தெரிவித்தார். அரசியல் கட்சி எனும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன […]

இந்தியா

மணிப்பூர்: பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறி பி.எஸ்.எப். வீரர் இடைநீக்கம்

  • July 26, 2023
  • 0 Comments

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3ம் திகதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்று அவர்களுக்கு அவமதிப்பும் நடந்தது. இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் கடந்த […]

இலங்கை

தொலைப்பேசியில் ஆபாச படங்களை வைத்திருந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

  • July 26, 2023
  • 0 Comments

தொலைப்பேசியில் ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் யுவதி ஒருவருக்கு தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த யுவதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மேற்படி  அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தண்டனை விதித்தார். இதன்படி குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் தலா  1500 ரூபா அரசாங்கக் கட்டணமாக வழங்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச புகைப்படங்களை மீளமுடியாதவாறு நீக்கவும் சிம் கார்ட் […]

இலங்கை

இலங்கையில் ‘ஈ-பேருந்துகள்’ – அமைச்சர் லசந்த அழகியவண்ண

  • July 26, 2023
  • 0 Comments

வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேருந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் கூறினார். முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் லக்திவ பொறியியல் நிறுவனத்தின் வளங்களின் மூலம் கூடிய பயனைப் பெறும் வகையில் அதனை […]

இலங்கை

ஹரக் கட்டாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு!

  • July 26, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ள நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” என்பவரை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை இன்று (26) வழங்கியுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்தார். வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் இருந்து 20,000 ரூபா பணத்தையும் காரையும் கொள்ளையடித்ததாகவும் ஹரக் […]

இந்தியா

இருமல் மருந்தில் நச்சு வேதிப்பொருட்கள்! QP Pharmachem நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த இந்தியா

  • July 26, 2023
  • 0 Comments

இருமல் மருந்தின் தரம் குறைவாக இருப்பதாக கூறி, QP Pharmachem நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தும், அதன் ஏற்றுமதியை இடைநிறுத்தியும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மாஷால் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் பயன்படுத்தப்பட்ட இருமல் மருந்துகளில் மாசுபாடு இருப்பதை கண்டறிந்தது.அதன்படி, மருந்து தயாரிப்பாளரின் உற்பத்தி உரிமத்தை இடைநீக்கம் செய்வதாக நாடாளுமன்றத்தில் இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்தால் குறைந்தது 89 […]

இலங்கை

எதிர்வரும் 4ம்‌ திகதி முதல் ”யாழ்‌ நிலா”

  • July 26, 2023
  • 0 Comments

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள சொகுசு ரயிலுக்கு பெயர் யாழ்_நிலா. இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும் இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும் மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000 ரூபாவும் அறவிடப்பட்டும்.