ஆசியா

பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கம் : இருவர் பலி!

  • July 26, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் டோக்சுரி புயல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த புயல் வீடுகளின் கூரைகளை சேதப்படுத்தியதாகவும், மரங்களை வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புயல் காரணமாக  16 ஆயிரம் மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 430 மைல் (700 கிமீ) காற்று மற்றும் மழையுடன் கூடிய புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளிநாட்டு வேலைக்காகச் செல்லவிருக்கும் குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கான புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் விண்ணப்பங்களை அவர்களது பகுதி கிராம சேவகர் அதிகாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி மூலம் சான்றளித்து, […]

வாழ்வியல்

கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா?

கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன் என்றால் கரும்பில் சுண்ணாம்புச் சத்து என்ற கல்சியம் அதிகம் உள்ளது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து இரசாயண மாற்றமடைகின்றது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமாக சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். கரும்பு சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. * கரும்பின் சாறில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் […]

ஐரோப்பா

பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

  • July 26, 2023
  • 0 Comments

பிரான்சுக்குப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. பிரான்சுக்கு சுற்றுலா வருவோர், உள்ளூர் ஓட்டுநர் விதிகளை நன்கு அறிந்துவைத்திருப்பது நல்லது. குறிப்பாக, வாகனம் ஓட்டுவோர், பிரான்சின் பன்னிரெண்டு நிரந்தர குறைந்த மாசு மண்டலங்களில், நடைமுறையில் உள்ள விதிகளின்படி நடந்துகொள்ளவேண்டும். விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச அபராதத்தொகை 68 யூரோக்கள். இந்த தொகை மேலும் அதிகரிக்கலாம். வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன் பக்கக் கண்ணாடியில், புகை வெளியீட்டு அளவைக் காட்டும், Crit’Air sticker என்னும் […]

இலங்கை

இலங்கை செல்லவுள்ள பிரித்தானியர்களுக்கான அறிவுறுத்தல்!

  • July 26, 2023
  • 0 Comments

இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு செல்முன் இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் குறித்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணக் காப்பீட்டைப் பெறுவதும், அது போதுமான காப்பீட்டை வழங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரித்தானியா, சனநெரிசல் மிக்க பகுதிகளை தவிர்க்குமாறும், சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகைளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டவர்கள் பார்வையிடும் இடங்கள் உள்ளிட்ட […]

ஆசியா

வடகொரியாவுக்கு சென்ற சீன மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள்!

  • July 26, 2023
  • 0 Comments

சீன மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கான விஜயத்தை இன்று (26) மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சொய்கு தலைமையிலான குழு ஏற்கனவே வடகொரியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கொரியப் போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வடகொரியாவின் பியாங்யாங்கில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவைக் காண ரஷ்ய மற்றும் சீன பிரதிநிதிகள் சென்றுள்ளனர். இதற்கிடையே இந்த நாடுகளின் உறவு பலம் பெரும் பட்சத்தில் அது உக்ரைன் – ரஷ்ய போரில் எவ்வாறான தாக்கங்களை […]

இலங்கை

அனைத்துப்பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை

பொலிஸ் காவலில் இருந்துபோது உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணை நிறைவு!

  • July 26, 2023
  • 0 Comments

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் குறித்து மரண விசாரணை தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26.07) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த பெண் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த மரண விசாரணைகளை மேற்கொண்டு வரும்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  மெரில் ரஞ்சன் கல்கஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சிய விசாரணை […]

இலங்கை

வவுனியா சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் கணவரும் பலி!

  • July 26, 2023
  • 0 Comments

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்,இவரது கணவரான சுகந்தன் உற்பட 10 பேர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவரான சுகந்தன் இன்று (26) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு […]

இந்தியா

மணிப்பூர் விவகாரம்! மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை கொண்டுவர முடிவு செய்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக எதிர்க்கட்சிகளின் மத்தியில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் அரசாங்கம் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். மோடியின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருப்பதால் மோடியின் அரசாங்கம் வாக்குகளை இழக்காது. ஆனால், இந்த நடவடிக்கை மோடியை […]