பொழுதுபோக்கு

திருமணங்களில் திரைப்படப் பாடல்களை இசைப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு

திருமண விழாக்கள் மற்றும் பிற விழாக்களில் பாலிவுட் பாடல்களை இசைப்பது காப்புரிமை மீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்காது என இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமண விழாக்களில் ஹிந்தி திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதற்காக காப்புரிமைச் சங்கங்கள் ராயல்டி வசூலிப்பது தொடர்பான பல புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரிவு 52, பதிப்புரிமை மீறலாக இல்லாத சில செயல்களைக் கையாள்கிறது. எந்தவொரு நேர்மையான மத விழா அல்லது அதிகாரப்பூர்வ விழாவின் போது இலக்கியம், […]

இலங்கை

5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை! ரணில் வெளியிட்ட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஜம்மியதுல் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதிய்யா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் […]

இலங்கை

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்!

  • July 27, 2023
  • 0 Comments

‘மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண,  காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருடன் இணைந்தே இந்த கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இலங்கை அரசாலும் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு காலம் எடுக்கலாம் என்றும் எனவே தான் பெருந்தோட்ட மக்களுக்கு […]

இலங்கை

ஆபத்தில் உள்ள 140 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள்!

  • July 27, 2023
  • 0 Comments

இடைவிடாத வெப்ப அலை காரணமாக   140 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். சமீபத்திய வாரங்களில் தென் மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரம் மற்றும் வடகிழக்கு நியூ ஜெர்சி போன்ற நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 75 முதல் 80 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. வெப்ப அலை கிழக்கு நோக்கி ஊர்ந்து செல்வதால், மத்திய மேற்கு […]

பொழுதுபோக்கு

15 வருடங்களுக்கு பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? எந்த படத்தில் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவை ஊக்கப்படுத்தியவர், தனது படங்களில் மட்டுமல்ல, நடிப்பிலும் புதுமைகளைக் கொண்டு வந்தவர். கே.எஸ் ரவிக்குமார்.இயக்கிய ‘அவ்வை சண்முகி’ (1996) திரைப்படத்தில் பெண் கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் கமல் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை திகைக்க வைத்தார். தற்போது வெளியான தகவலின்படி ஷங்கரின் இயக்கத்தில் வரவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் கெட்அப்பில் நடித்துள்ளார். […]

இலங்கை

வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது!

  • July 27, 2023
  • 0 Comments

அரச வைத்தியசாலைகள் உட்பட சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில்  செலுத்தப்படாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மின்சார சபையுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். இந்த கலந்துரையாடலின்போது, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள […]

வட அமெரிக்கா

iPhone வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற தம்பதி…!

  • July 27, 2023
  • 0 Comments

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்து உள்ளனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க இந்த காரியத்தை செய்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியதை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.இதை தொடர்ந்து பொலிஸார் குழந்தையை விற்ற தாய் ஷதி […]

உலகம்

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி!

  • July 27, 2023
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இது உலகளவில் தானிய பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவை பொருத்தவரை தற்பொது வெப்பநிலையானது 44.2 ° C ஆக உயர்ந்துள்ளது. இது தெற்கு ஐரோப்பாவில் தானிய உற்பத்தி கடந்த ஆண்டை விட   60% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியா அரசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை உலகளவில் அரசி விலை உயர்வுக்கு வழிவகுத்தது. அதேநேரம் பல நாடுகள் உணவு பற்றாக்குறையுடன் போராட வேண்டி ஏற்படும் […]

ஐரோப்பா

நெடுஞ்சாலையில் நிர்வாணமாக துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்!

அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார். பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி […]

ஐரோப்பா

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய Mi-8 ஹெலிகொப்டர் – 06 பேர் பலி!

  • July 27, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Mi-8 என்ற ஹெலிகாப்டர் தெற்கு சைபீரியாவில் அல்தாய் குடியரசில் உள்ள பகுதியில் தரையிறங்கும்போது மின்கம்பியுடன் மோதி தீபிடித்து எரிந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஹெலிகாப்டர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சுற்றுலா பயணிகள் குழுவை ஏற்றிச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகொப்டரில் 13  பேர் இருந்தாக கூறப்படுகிறது. அவர்களில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.