இலங்கை

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறித்த அறிவிப்பு!

  • August 1, 2023
  • 0 Comments

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமான என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்றிரவு (31) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தத்துடன், ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் […]

இலங்கை

யாழ். காரைநகர் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

  • August 1, 2023
  • 0 Comments

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பிரதேச சபை செயலாளருக்கும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் க.பாலச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையால் குறித்த பகுதிக்கு அவரே நேரடியாக நேற்று (31) காலை சென்றார். இதன்போதே காரைநகர் பிரதேச சபை […]

பொழுதுபோக்கு

பிளாக் பாஸ்டர் ஹிட் வெற்றியை கொண்டாடும் “டிடி ரிட்டர்ன்ஸ்” டீம்

  • August 1, 2023
  • 0 Comments

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. இப்படம் காமெடி கலக்கலாக இருக்க நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் வெளிவந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம். சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக டிடி ரிட்டர்ன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தனாம் மார்க்கெட் இதன் மூலம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா […]

மத்திய கிழக்கு

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி, 23 பேர் காயம்

  • August 1, 2023
  • 0 Comments

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 பேர் […]

பொழுதுபோக்கு

இளையராஜாவாக மாறப்போகும் தனுஷ்? வைரலாகும் பேட்டி

  • August 1, 2023
  • 0 Comments

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதை கடந்து பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகொண்டவராக உள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷை இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் பால்கி. இந்த நிலையில் தனுஷை வைத்து ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பால்கி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, “தனுஷ் மிகவும் […]

ஆசியா

சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காலநிலை – 11 பேர் மரணம் – பலர் மாயம்

  • August 1, 2023
  • 0 Comments

சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் காணாமல்போயுள்ளனர். கடந்த சில நாள்களாக சீனாவில் கனமழை பெய்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொதுவாக இந்த மாதத்தில் வறன்ட காலநிலை நிலவும். ஆனால், இந்தாண்டு இயல்பை விட மழையின் அளவு அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக சீனாவின் பல பகுதிகளில் […]

இலங்கை

திருகோணமலையில் விபச்சார நிலையத்தை சுற்றிவளைத்த மக்கள் – சிக்கிய இளம் பெண்கள்

  • August 1, 2023
  • 0 Comments

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையமொன்று நேற்றிரவு (31) அப்பிரதேச மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. சுற்றி வளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். ஒப்படுக்கப்பட்ட இருபெண்களும் 25,30 வயதுடையவர்கள் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர் ஒப்படைக்கப்பட்ட பெண்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இரு பெண்களையும் […]

அறிந்திருக்க வேண்டியவை

46,000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்ற புழுக்கள் – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

  • August 1, 2023
  • 0 Comments

46,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த Ice Age என்று அழைக்கப்படும் பனியுகத்தில் உறைந்துபோன புழுக்கள் உயிருடன் திரும்பியுள்ளன. Panagrolaimus kolymaensis எனும் புழு சைபீரியாவில் (Siberia) உறைந்திருந்த படிமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. படிமத்தை உருகவைத்தபோது புழுக்கள் நகர்ந்ததாக PLOS Genetics சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டது. புழுக்கள் உயிர் பிழைப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர். உறைந்துபோவதற்கு முன் புழுக்கள் சிறிது காலம் போதுமான நீரைப் பெற்றிருக்கவில்லை. உறைநிலைக்குக் கீழ் 80 பாகை செல்சியஸ் சூழலில் புழுக்கள் பிழைப்பதற்கு அது […]

வட அமெரிக்கா

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்க நெட்பிளிக்ஸ் முயற்சி – அமெரிக்காவில் சர்ச்சை

  • August 1, 2023
  • 0 Comments

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பிரிவில் இந்த வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் அது எதிர்மறையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹாலிவுட்டில் திரை எழுத்தாளர்கள் நெட்பிளிக்ஸ் டிஸ்னி அமேசான் போன்ற படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் ஊதியத்தை அதிகரிக்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாலிவுட் நட்சத்திரங்களும் படப்பிடிப்புகளை நிறுத்தி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ஹாலிவுட் படங்களுக்கு […]

இலங்கை

வவுனியாவை உலுக்கிய இரட்டைக்கொலை – சிக்கிய ஐவர்

  • August 1, 2023
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதல் தொடர்பில் 5 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்குத் தீயிட்டது. இந்தச் சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 21 வயது இளம் குடும்பப் பெண் சம்பவ […]