உலகம்

3 நாட்களாக லிஃப்டிற்குள் சிக்கித் தவித்த இளம் பெண்! இறுதியில் நடந்தது என்ன?

லிஃப்டிற்குள் 3 நாட்களாக சிக்கித் தவித்த இளம் பெண் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இங்கு தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது உறவினர்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் லியோன்டிவாவை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். ஜூலை 24 ஆம் […]

இலங்கை

ஜப்பானில் வேலை வாய்ப்பு! பரீட்சை திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகளில் அடிப்படை மொழி சோதனைகள், நர்சிங் கேர் தொழிலாளர்கள், உணவு சேவை தொழில் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும். விண்ணப்பதாரர்கள் ப்ரோமெட்ரிக் http://ac.prometric-jp.com/testlist/ssw/index.html இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

அக்கட தேசத்தை ஆட்டம் காண வைக்க போகும் தளபதி

  • August 1, 2023
  • 0 Comments

விஜய்யின் மனைவி சங்கீதாவின் வீடு லண்டனில் இருப்பதால் ஒவ்வொரு படமும் நிறைவடைந்த பிறகு வெக்கேஷனுக்காக அங்கு சென்று விடுவார். அந்த வகையில் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தை முடித்துவிட்டு லண்டன் சென்றிருக்கிறார். விஜய் மீண்டும் வருவதால் தரமான சம்பவம் ஒன்று காத்திருக்கின்றது. விஜய் தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அக்கட தேசமான கேரளாவில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில ரசிகர்களை சந்திக்க […]

பொழுதுபோக்கு

கார்த்தியின் ‘சர்தார் 2’ ! வெளியான சூப்பர் அப்டேட்

கார்த்தி கடந்த ஆண்டு இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் இணைந்து ‘சர்தார்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை வழங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. சர்தார் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அதன் இரண்டாம் பாகம் இருக்கும் என்று பிரின்ஸ் பிக்சர்ஸ் அறிவித்தது. தற்போது சர்தார் 2 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொடர்ச்சியில் ஒரு பெரிய மாற்றம் உள்ளது. இரண்டாம் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக […]

அறிந்திருக்க வேண்டியவை

உங்கள் வியர்வை கூட நறுமனம் வீசும் : இந்த அற்புத பழம் பற்றி தெரியுமா?

  • August 1, 2023
  • 0 Comments

இது நாம் அறியாத பழ வகைகளில் ஒன்றுதான் கெப்பல் பழம்.  இந்த மரம் எல்லா கால நிலையிலும் வரும். இது ராஜாக்கள் காலத்தில் அவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பழம் என்பதால் தான் இந்த மரத்தை பற்றி அவ்வளவு யாருக்கும் தெரியவில்லை. இந்த மரத்திற்கு உரித்தான சில அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, ஆண் பூ பெண் பூ ஓரே மரத்தில் காய்க்கும். அதேநேரம் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை நறுமணம் கமழும். […]

இலங்கை

தெஹிவளையில் மறைந்த விஜய குமாரதுங்கவின் சிலை சேதம்!

தெஹிவளை பொது சந்தைக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலையின் முகத்தின் இடது பக்கம் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிலை மீது கற்களை வீசிய இனந்தெரியாத சிலர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும்,இந்தச் சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் செயல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், சிலையின் ஒரு பகுதி இயற்கையாக இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்த […]

இலங்கை

தலவாக்கலையில் மலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு

  • August 1, 2023
  • 0 Comments

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.

புகைப்பட தொகுப்பு

புகழின் உச்சிக்கு சென்று திடீரென காணாமல் போன லக்ஷ்மி மேனனின் கலக்கல் புகைப்படங்கள்….

  • August 1, 2023
  • 0 Comments

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை லக்ஷ்மி மேனன் துபாயைச் சேர்ந்த கலைஞர் ராமகிருஷ்ணன் மற்றும் கொச்சியில் நடன ஆசிரியையான உஷா மேனன் ஆகியோருக்கு பிறந்தார். பரதநாட்டிய கலையில் சிறந்து விளங்கிய லக்ஷ்மி மேனன் அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற தொடங்கினார். 8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நடிக்க தொடங்கினார். முதலில் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 2011 இல், பரதநாட்டியம் ஒளிபரப்பின் போது அவரைப் பார்த்த மலையாள இயக்குனர் வினயன் […]

இலங்கை

மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளால் வெல்வார் – ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

  • August 1, 2023
  • 0 Comments

70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”SLPP உறுப்பினர்களால் மீண்டும் ஒருமுறை வெல்ல முடியாது என்று பலர் கூறினர். கடந்த ஆண்டு நாங்கள் தாக்கப்பட்ட பிறகு பலரது எண்ணம் இதுதான். எவ்வாறாயினும் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் எம்மால் எம்மை மறுசீரமைக்க முடிந்துள்ளது” என பொல்கஹவெலவில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சந்திப்பில் அவர் தெரிவித்தார். […]

இலங்கை

ஒரு வருடத்திற்கு பிறகு ஒற்றை இலக்கத்தில் பதிவான பணவீக்கம்!

  • August 1, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில், இந்த எண்ணிக்கை 12 சதவீதமாக பதிவாகியுள்ளது, மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை எட்டியதும் சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது. உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது, மேலும் எதிர்காலத்தில் உணவு அல்லாத வகையிலும் விலை குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.