வட அமெரிக்கா

மாக்டாலன் தீவுகளில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல் பாகங்கள் கண்டுப்பிடிப்பு!

  • August 4, 2023
  • 0 Comments

கனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல்களின் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.கியூபெக் மாகாணத்தின் மாக்டாலன் தீவுகளில் இந்த கப்பல் இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 18ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பல்களின் பாகங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.ஆய்வாளர் ஜேன் சிமோன் ரிச்சர்ட் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த கப்பல் பாகங்கள் இதுவரையில் எவரினாலும் கண்டு பிடிக்கப்படாதவை என ஆய்வாளர் ஜேன் சிமோன் தெரிவிக்கின்றார்.ஒரு கப்பலின் பாகத்தை கண்டு பிடிப்பதே மிகவும் அரிய […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் – ஒரே போடாய் போட்டார் அனிருத்

  • August 4, 2023
  • 0 Comments

ஜெயிலர் படத்தை பார்த்த அனிருத் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படங்கள் படுதோல்வியை சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை. இதனால் உடனடியாக ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சிக்கலாகிவிடும் என யோசித்தார் ரஜினிகாந்த். எதிர்பார்த்தபடியே ரஜினியை வைத்து சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் நெல்சன். கண்டிப்பாக இந்தப் படம் மெகா […]

இலங்கை

நீர் கட்டணத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை!

  • August 4, 2023
  • 0 Comments

அடுத்த சில மாதங்களில் நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கையும் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதுடன், அடுத்த திருத்தத்தில் நீர்க் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் ரஷ்யாவின் லூனா-25 தானியங்கி நிலையம்

  • August 4, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. லூனா-24 என்பது சோவியத் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற […]

இலங்கை

எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

  • August 4, 2023
  • 0 Comments

சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக உலக சந்தையில் எரிவாயுவின் விலை 85 டொலாராக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய விலைதிருத்தம் செய்யப்படும் எனவும் புதிய விலை திருத்தம் இன்று (04.08) அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – கடவுசீட்டு பெற கொழும்பு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

  • August 4, 2023
  • 0 Comments

அனுராதபுரம் -தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உம்ரா செல்வதற்காக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) செய்வதற்காக கொழும்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் வழியில் நேற்றிரவு (03) 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்விபத்தில் அனுராதபுரம் -கஹடகஸ்திகிலிய பகுதியில் வசித்து வரும் அப்துல் ஹக் மௌலானா, அவரது மனைவி பாத்திமா வபா, தங்கையான பாத்திமா ஆபிதா, மற்றும் சாரதி நசீம் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் […]

இலங்கை

சரியான அறிவித்தல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை – அமைச்சரின் குற்றச்சாட்டு!

  • August 4, 2023
  • 0 Comments

இம்முறை பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க நேரிடும் என்ற செய்தியை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தமைக்கு  சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் எந்தவொரு துறையிலிருந்தும் விவசாயிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதனால் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே அந்த மக்களுக்கு விவசாய அமைச்சினால் உர விநியோகத்திற்காக பெருமளவிலான […]

இலங்கை

திருகோணமலையில் வீட்டு முற்றத்தில் நின்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • August 4, 2023
  • 0 Comments

திருகோணமலை -கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வனர்த்தம் இன்று (04)அதிகாலை இடம் பெற்றுள்ளது. யானையின் தாக்குதலினால் கந்தளாய் -பேரமடுவ இதில் வசித்து வரும் ஆர். எம். குணவர்தன (64 வயது) எனவும் தெரிவித்தனர். வீட்டு முற்றத்திற்கு வருகை தந்த காட்டு யானையை விரட்டுவதற்காக முற்பட்டபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் உடல் கூற்று பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு […]

ஆசியா

சியோலில் கத்திக்குத்து தாக்குதல் -14 பேர் காயம்!

  • August 4, 2023
  • 0 Comments

தென்கொரிய தலைநகர் சியோலை அண்மித்த பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை இளைஞர் ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று பின்னர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் “சியோங்னம்” என்ற பகுதியில்  நேற்று (03.08) இடம்பெற்றுள்ளது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 20 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சரக்கு போக்குவரத்தில் பணிபுரியும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

திருவண்ணாமலையைச் சுற்றி நள்ளிரவில் கிரிவலம் வந்தார் அருண் விஜய்

  • August 4, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “யானை” திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது. மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ராஜகோபுரம் […]