இத்தாலியில் சீஸ் கட்டிகள் சரிந்து விழுந்து ஒருவர் பலி!
வடக்கு இத்தாலியின் பெர்கமோ அருகே பால் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் 25,000 சீஸ் கட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அலமாரிகள் சரிந்து விழுந்தால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 74 வயதான கியாகோமோ சியாப்பரினி என்ற நபரே உயிரிழந்துள்ளார். சீஸ் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 40 கிலோ எடையுள்ளவை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த உலோக அலமாரி எவ்வாறு சரிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் பொருள் சோர்வு அல்லது தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.