ஐரோப்பா

குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல்: உரிமையாளரை தேடும் பிரிட்டன் பொலிஸார்!

  • August 10, 2023
  • 0 Comments

தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது. Jodie Harper என்னும் அந்தப் பெண் கடற்கரையை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவருக்கு ஒரு பார்ச்ல கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் கவர் ஒன்றினுள் ரப்பர் அடுக்கு ஒன்றுடன் வெள்ளை நிறப் பவுடர் இருப்பதைக் கண்ட Jodie, உடனடியாக அதை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த பார்சலில் இருந்தது கொக்கைன் என்னும் போதைபொருள் என்பது தெரியவரவே, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார் Jodie. காரணம், […]

இலங்கை

கொழும்பில் மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

  • August 10, 2023
  • 0 Comments

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையினால் கொழும்பில் இன்று (10.08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, கோட்டை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், கலுமுவதொர பிட்டிய உள்ளிட்ட பல இடங்களுக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். எவ்வாறாயினும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த நீதவான் நீதிமன்ற உத்தரவை போராட்டக்காரர்களிடம் கையளிக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான […]

இலங்கை

பதுளை பொதுவைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!

  • August 10, 2023
  • 0 Comments

பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று (09.08) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு முழுமையாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆசியா

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

  • August 10, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பணிப்புரைக்கு அமைய, அந்நாட்டு ஜனாதிபதி நேற்று (09.08)  கலைக்கப்பட்டுள்ளது. ஐந்து வருட பாராளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இவ்வாறு பாராளுமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஆனால் அரசியல் நெருக்கடிகள் நீடிக்கும் இந்த காலப்பகுதியில் தேர்தல்கள் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் என்றும் தேர்தல் […]

இந்தியா

சவப்பெட்டியில் இருந்து உயிரோடெழுந்த பாஜக-வின் முன்னால் தலைவர்

  • August 10, 2023
  • 0 Comments

அரசியல் குதிப்பதற்கு பலருக்கும் ஆசையிருக்கும், ஆட்சியில் இருப்பவர்களும், எதிரணியில் இருப்பவர்களும் வாக்கு வித்தியாசத்தில் தங்களுக்கு முன்பாக இருப்பவர் மரணிக்கவேண்டும். அப்போதுதான் தங்களால் எம்.பியாக முடியுமென நினைப்பவர்களும் உள்ளனர். எனினும், மரணித்ததாக கூறப்படும் அரசியல் வாதியொருவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டெழுந்த சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மகேஷ் பாகேல் (65), முன்னாள் ஆக்ரா பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உடற்பாகங்கள் செயழிந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!

  • August 10, 2023
  • 0 Comments

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களின் 36வது வருடாந்த மாநாடு நேற்று (09.08) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஆண்டுடன்  ஒப்பிடும்போது, ​​எதிர்காலத்தை நம்பலாம். அச்சமின்றி முன்னேறலாம். கடன் மறுசீரமைப்பு முடிந்தது. முதலில் நிதி மூலதனம். பல நிறுவனங்களும் தனி நபர்களும் வெளிநாட்டில் செல்வம் வைத்திருக்கிறார்கள். நம்மால் […]

தென் அமெரிக்கா

ஈகுவடோரில் தேர்தல் பிரசாரத்தின்போது ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை

  • August 10, 2023
  • 0 Comments

தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள நாடு ஈகுவடோர். போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் இந்த நாடு உள்ளது. ஈகுவடோர் நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். இந்த நாட்டில் விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் நேற்று, தலைநகர் குவிட்டோவில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒருவர் […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் விமர்சனம்… ப்ளூ சட்டை மாறன் அதகள ட்வீட்

  • August 10, 2023
  • 0 Comments

ஜெயிலர் படம் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 900 திரைகளில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் உலகளவில் 4000 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் திரையிடப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் இல்லாததால் வெளிமாநிலத்திலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் அதிகாலையிலேயே ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டனர். படத்தை பார்த்தவர்கள் ஜெயிலரில் நெல்சன் திலீப்குமாரும், […]

இலங்கை

நாமல் போடும் அடுத்தக்கட்ட திட்டம் – வெளிவந்த முக்கிய தகவல்

  • August 10, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ‘எதிர்க்கட்சி படை’ ஒன்றை உருவாக்கப் போவதாக பொஹட்டுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாமலை சுற்றி அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட மேலும் பல புதிய எம்.பி.க்களின் உதவியுடன் நாமல் தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது எப்படியாவது வெற்றியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உயர்த்துவது குறித்து இந்தக் குழு ஆலோசித்துள்ளது. இந்த நாட்களில் உறுப்பினக்களை கூட்டிச் செல்லும் நடவடிக்கைகள் […]

ஆசியா

சிங்கப்பூரில் பெண்ணை தாக்கியவருக்கு நேர்ந்த கதி

  • August 10, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பெண்ணை தாக்கியவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதுப் பெண்ணை நோக்கி இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி அவரைத் தாக்கிய நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவத்துக்காக, 32 வயதுச் சிங்கப்பூரர் வோங் சிங் ஃபோங்கிற்கு (Wong Xing Fong) அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹிந்துச்சா நீட்டா விஷ்ணுபாய் (Hindocha Nita Vishnubhai) என்னும் பெண்மணியை இனவாத நோக்கில் அவர் திட்டித் துன்புறுத்திய குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. விரைவுநடைப் […]