வாழ்வியல்

பெண்களின் கூந்தல் பராமரிப்பிற்கான இலகுவான வழி!

  • May 18, 2023
  • 0 Comments

வீட்டையும் நிர்வகித்து, வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு தங்களை பராமரித்துக் கொள்வதற்கான நேரம் குறைவாகவே இருக்கும். குறிப்பாக கூந்தல் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது சிரமமான செயலாகும். சில எளிய முறைகளை பின்பற்றினால், கூந்தல் பராமரிப்பு எளிதாக மாறும். அதற்கான வழிகள் இங்கே… முடியின் வேர்க்கால்களில் இயல்பாகவே எப்போதும் எண்ணெய் சுரக்கும். எனவே, தினசரி தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. குறைந்தது 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிப்பது நல்லது. தூசு, மாசு, வாகனப் […]

அறிந்திருக்க வேண்டியவை

Paracetamol மருந்தை நீண்ட காலம் பயன்படுத்தினால் காத்திருக்கும் ஆபத்து!

  • May 18, 2023
  • 0 Comments

Paracetamol மருந்தை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தும் போது காத்திருக்கும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Paracetamol பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது. Edinburgh பல்கலைக்கழகத்தின் ஆய்வில் சுமார் 110 பேர் பங்கேற்றனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கைச் சேர்ந்தவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை உட்கொள்பவர்களாகும். ஆய்வில் அனைவரும் இரண்டு வாரம் வரை நாளொன்றுக்கு 4 […]

கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு 5 ஆண்டுகளில் காத்திருக்கும் ஆபத்து – ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை

  • May 18, 2023
  • 0 Comments

உலகம் அடுத்த 5 ஆண்டுகளில் சந்திக்கவிருக்கும் வெப்பநிலை தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த காலநிலை இதுவரை கண்டிராத ஆக வெப்பமானதாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கையில் அந்த அதிர்ச்சி தரும் முன்னுரைப்பு வெளியானது. 2027ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை, அதிகபட்சமாக உயரக்கூடிய ஒன்றரை டிகிரி செல்சியஸ் அளவை மிஞ்சுவதற்கான சாத்தியம், கிட்டத்தட்ட 65 விழுக்காடு என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்பநிலை உயர்வு தற்காலிகமானதாக […]

உலகம்

நியூயோர்க்கில் 38.1 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பைபிள்

  • May 18, 2023
  • 0 Comments

நியூயோர்க்கில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிப்ரூ மொழி விவிலிய நூல் (பைபிள்) ஒன்று 38.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடந்த ஏலத்தில் மிக அதிக விலையில் விற்கப்பட்ட கையெழுத்துப் பிரதி என்ற சாதனையையும் அது படைத்தது. கோடெக்ஸ் சாஸூன் (Codex Sassoon) என்ற அந்தப் பைபிள் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள் ஏறக்குறைய எழுதிமுடிக்கப்பட்டு இன்றுவரை இருக்கின்றது. அந்த ஏலம் இருவருக்கு இடையே 4 நிமிடங்களுக்கு நடந்ததாக ஏலத்தை நடத்திய […]

இலங்கை

கொழும்பில் மாயமான யாழ் இளைஞன் – 7 மாதங்களாக தேடும் குடும்பத்தினர்

  • May 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் காணாமல் போயுள்ளார். கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் […]

உலகம்

நியூஸிலாந்து விடுதியில் வேண்டுமென்றே தீ வைப்பு? பொலிஸார் தகவல்

  • May 18, 2023
  • 0 Comments

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் விடுதியொன்று தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என தாம் கருதுவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 மாடிகள் கொண்ட இக்கட்டடம் நேற்று அதிகாலை தீப்பற்றியதால், குறைந்தபட்சம 6 பேர் பலியானதுடன், இச்சம்பவத்தின் பின் 20 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை. இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவமாக நாம் கருதுகிறோம் என […]

ஐரோப்பா

பிரான்ஸில் தடை செய்யப்படவுள்ள பொருள்!

  • May 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. hexahydrocannabinol அல்லது HHC என அழைக்கப்படும் இந்த கஞ்சா பயன்பாடு பிரான்சில் அண்மையில் அனுமதிக்கப்பட்டது. மிகச் சிறிய அளவிலான பதப்படுத்தப்பட்ட கஞ்சா மூலிகை மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரும் வாரங்களில் அவற்றுக்கு தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் François Braun தெரிவிக்கையில், அடுத்த சில வாரங்களில் […]

இலங்கை

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு அறிவிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நிகழ்வில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி […]

இலங்கை

கொழும்பில் பெரும் சோகம் – தாயின் கணவரால் கொலை செய்யப்பட்ட சிறுவன்

  • May 18, 2023
  • 0 Comments

கொழும்பில் தனது தாயின், கணவர் எனக்கூறப்படும் நபரினால் தாக்கப்பட்ட 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 50 வயதான சந்தேகநபர், கடந்த 12 ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று, மேற்படி, இளைஞரின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்போது, மதுபோதையில் வீட்டுக்கு வந்து சத்தம் போடவேண்டாம் என குறித்த சிறுவன் அவரை திட்டியுள்ளார். அதனையடுத்து, சந்தேக நபர் இரும்பு கம்பியால் சிறுவனை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி

  • May 18, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் A 46 அதிவேக பாதையில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்ஏப்ரல் 15 ஆம் திகதி ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை A 46 இல் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது ஹைட்பேர் பிரதேசத்தை நோக்கி பயணித்த ஒரு வாகனத்தினுடைய வாகன சாரதியானவர் மற்றைய வாகனத்தை முந்தி செல்ல முயற்சி செய்த பொழுது மற்றைய வாகனத்தில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தை ஓட்டி வந்த வாகன சாரதிக்கு எவ்வித […]

You cannot copy content of this page

Skip to content