பொழுதுபோக்கு

ஹிந்தியில் பட்டையை கிளப்பும் ரஷ்மிகா!! யாருடன் இணைந்துள்ளார் தெரியுமா?

  • May 20, 2023
  • 0 Comments

ஷாஹித் கபூர் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முதல் முறையாக இணையும் புதிய படத்த்திற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னணி செய்தி இணையதளத்தின் அறிக்கையின்படி, நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஷாஹித் ஒரு நகைச்சுவையான நடிப்பை வெளியிட ஆர்வமாக உள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதில் நடிகர் அனீஸ் பாஸ்மிக்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மொத்த தேதிகளை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் […]

இலங்கை

நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு !!

  • May 20, 2023
  • 0 Comments

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் 59 டெங்கு அபாய பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறியுள்ளது. இலங்கையில் 50 வீதமான […]

ஆசியா

இம்ரான் கான் வீட்டில் பொலிஸார் அதிரடி சோதனை; சிக்கிய 6 பயங்கரவாதிகள்!

  • May 20, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு சோதனை நடத்தினர். அண்மையில், இம்ரான் கான் வீட்டில் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்கும்படியும் அவரது கட்சிக்கு, பொலிஸார் அறிவுறுத்தினர். இந்நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, லாகூரிலுள்ள இம்ரான் வீட்டில், அதிரடியாக உள்ளே நுழைந்து பொலிஸார் சோதனை நடத்தினர்.அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க வாயில் என அனைத்து இடங்களிலும் […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசனின் “வேட்டையாடு விளையாடு” ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ஜூன் மாதம் ரெடியா இருங்க…

  • May 20, 2023
  • 0 Comments

நடிகர், தயாரிப்பாளர், கவிஞர் என பல முகங்களை கொண்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில், கமலில் மைல்கல் படங்களில் ஒன்றான ‘வேட்டையாடு விளையாடு’ குறித்து ரசிகர்களுக்கு இதோ ஒரு மகிழ்ச்சியான அப்டேட். இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் ஜூன் மாதம் படத்தின் மறு வெளியீட்டை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது, இருப்பினும், புதிய டீசர் அல்லது டிரெய்லர் கட் […]

ஐரோப்பா

F-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கினால் பெரிய அபாயங்கள் ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

  • May 20, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பெரிய அபாயங்கள் ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்கினால், “பெரிய ஆபத்துக்களை” எதிர்கொள்ளும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோவை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. F-16 போர் விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கான கூட்டு நேச நாட்டுப் பயிற்சித் திட்டங்களை வாஷிங்டன் ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

இலங்கை

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை!

  • May 20, 2023
  • 0 Comments

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள […]

ஐரோப்பா

மேற்கத்தேய நாடுகளின் பொருளாதர தடைகளை மீறி ட்ரோன்களை பெறும் முயற்சியில் ரஷ்யா!

  • May 20, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவம் மேற்கத்திய தடைகளை மீறி கஜகஸ்தான் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து ட்ரோன்களைப் பெற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. (OCCRP) மற்றும் Der Spiegel இதழ் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, அஸ்பான் அர்பா என்ற  நிறுவனத்திடம் இருந்து ரஷ்யா 500 ட்ரோன்களை இறக்குமதி செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம், சுரங்கம், கட்டுமானம், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்களை வழங்குவதாகவும் தெரிவித்தது. இதற்கிடையே […]

செய்தி தமிழ்நாடு

17 வயது பெண்ணை அடித்து சித்திரவதை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய கோரிக்கை

  • May 20, 2023
  • 0 Comments

மதுராந்தகம் மே.20 செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பா.பர்வீன், வயது 17, என்பவர் அதே பகுதியைச் சார்ந்த கருப்பன் மகன் ராஜா மற்றும். ராமதாஸ் ஆகியோருக்கும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு A.S No.44/2016 நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்குறிய சிவில் வழக்கை மறைத்து ராஜா என்பவர் பர்வீன் குடும்பத்தின் மீது ஆய்வாளர்,DCB செங்கல்பட்டுல் புகார் மனு கொடுத்து FIR பதிவு செய்யப்பட்டு ராஜா என்ப அம்மாவையும் பாட்டியையும் கைது செய்து பிறகு ஜாமினில் […]

ஆசியா

சீனா-வியட்நாம் எல்லையில் விபத்து : 11 பேர் உயிரிழப்பு!

  • May 20, 2023
  • 0 Comments

சீனா-வியட்நாம் எல்லையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவை சேர்ந்த ஓட்டுனர் உதவியாளர்,  இரண்டு வியட்நாம் பிரஜைகள் ஆவர். சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு […]

ஐரோப்பா

பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை!

  • May 20, 2023
  • 0 Comments

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. […]

You cannot copy content of this page

Skip to content