இலங்கை

மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

  • August 19, 2023
  • 0 Comments

மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 40 வயதுடைய தச்சராக பணிபுரிந்த இவர் மொரகஹஹேன, கிரிவத்துடுவ, யகஹலுவ பிரதேசத்தில் வசித்து வந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண் உட்பட 4 பேர் இணைந்து குறித்த  கொலையை செய்ததாக  பொலிசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்துள்ளார். இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான […]

இலங்கை

இலங்கையின் தற்போதைய பிரச்சினைகள் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தீர்க்கப்படும்!

  • August 19, 2023
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்டுள்ள விசேட வைத்திய மற்றும் மின் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில்  அறிவியல் ரீதியாக தங்களது பிரச்சினைகளை தீர்க்க வல்லவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வைத்தியர்கள் […]

இலங்கை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • August 19, 2023
  • 0 Comments

தகுதியான வாக்காளர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. எவரும் www.elections.gov.lk இணையத்தளத்திற்குச் சென்று விபரங்களைச் சரிபார்க்கலாம். தகவல்களைச் சரிபார்க்க தனிநபர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும். தேருநர் பதிவேட்டில் இருந்து தகுதியான வாக்காளர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால், செப்டம்பர் 4 ஆம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். 2005 ஜனவரி 31 அன்று அல்லது […]

ஆசியா

இம்ரான் கானுக்கு சிறையிலேயே விஷம் வைக்கப்படலாம்!

  • August 19, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து வருந்துவதாக அவரது மனைவி புஷிரா பீபி தெரிவித்துள்ளார். பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு புஷிரா பீபி எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கடித்தில் சிறையில் இம்ரான் கானுக்கு விஷம் கொடுக்கப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இம்ரான் கானை  ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நியாயமான காரணமின்றி தனது கணவர் அடையாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான் […]

இலங்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு!

  • August 19, 2023
  • 0 Comments

பொருளாதாரப் போக்குகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் மையமாக வைத்து இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார். புஸ்ஸ கடற்படையின் தொண்டர் படையின் மேம்பட்ட கடற்படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற வண்ணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட […]

ஆசியா

அத்துமீறிய அமெரிக்க கண்காணிப்பு விமானம்… விரட்டி அடித் வடகொரிய ராணுவம்

  • August 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்கா மட்டும் இன்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக அந்நாடு மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா அடங்கியபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க […]

இலங்கை

விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுவார்களா?

  • August 19, 2023
  • 0 Comments

தற்போதைய கடுமையான மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகிய செய்திகளை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. இது சாத்தியமான தீர்வாகாது என்பதனால் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என  வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். “முதலாவதாக, நிபுணர்களுக்கான ஓய்வூதிய வயது 60 இலிருந்து 63 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் ஓய்வு பெற்ற […]

பொழுதுபோக்கு

பிரிந்த கணவனை நினைத்து பொது மேடையில் கண்கலங்கிய சமந்தா…

  • August 19, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி குஷி திரைப்படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஷிவா நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்த போது, விஜய் தேவர்கொண்டாவுடன், நடிகை சமந்தா மேடையிலேயே இப்படத்தில் வெளியான குஷி பாடலுக்கு டூயட் நடனம் ஆடினார். இதனிடையே இப்படத்தின் மற்றொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை […]

வாழ்வியல்

தொப்பை உள்ள ஆண்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • August 19, 2023
  • 0 Comments

வேலைக்கு, கல்லூரிக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்களது உடலமைப்பு ஏற்றவாறு என்ன உடை அணியலாம் என தினமும் யோசித்து கொண்டே தான் இருக்கிறார்கள். முதல் நாளே என்ன ட்ரெஸ் போடலாம் என ஒரு மணி நேரம் யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தொப்பையுள்ள ஆண்கள் அதை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் பெல்ட்டை இருக்கமாக போடுகிறார்கள். பெண்களுக்கு ஷேப் வியர் வந்தது போன்று ஆண்களுக்கு எந்த ஒரு ஆடையும் வரவில்லை. இதனால் ஆண்கள் என்னடா […]

உலகம்

உலக மக்கள்தொகையில் சுமார் பாதி பேருக்கு காத்திருக்கும் ஆபத்து

  • August 19, 2023
  • 0 Comments

உலக மக்கள்தொகையில் சுமார் பாதி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் இது தொடர்பில் எச்சரித்துள்ளதுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு உலகெங்கும் டெங்கு காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. டெங்கு தொடர்பான தகவலுக்கும் உதவிக்குமான கோரிக்கைகள், கடந்த ஆண்டின் முற்பாதியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் சுமார் 15 சதவீதம் கூடின. International SOS எனும் சுகாதார, பாதுகாப்புச் சேவைகள் நிறுவனம் அந்தத் தகவல்களை வெளியிட்டது. […]