ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 95 வயது   மூதாட்டி உயிரிழப்பு!

  • May 24, 2023
  • 0 Comments

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு இல்லத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 95 வயது   மூதாட்டியான  கிளேர் நவ்லேண்ட்  மரணமடைந்தார். கூமா மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மூத்த கான்ஸ்டபிளான கிறிஸ்டியன் ஒயிட், பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூதாடியை தாக்கியமைக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில், கிறிஸ்டியன் ஒயிட் ஜுலை மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அதுவரையில் அவர் சமூகத்தில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட நவ்லேண்ட், […]

பொழுதுபோக்கு

தெலுங்கு ஹீரோ ஹன்சிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? வெடித்தது சர்ச்சை

  • May 24, 2023
  • 0 Comments

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பிரபல டோலிவுட் நடிகர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஆனால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாகவும் ஹன்சிகா கூறியதாக தெலுங்கு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. எனினும் இந்த சர்ச்சைக்குரிய செய்தியை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக […]

ஆசியா

டிக்டாக் நேரலையில் விபரீத விளையாட்டால் பரிதாபமாக பறிபோன உயிர்!

  • May 24, 2023
  • 0 Comments

டிக்டாக்கில் பிரபலமான சீனாவை சேர்ந்த நபர், டிக்டாக்கில் விபரீதமான ஒரு சவாலை செய்ய முயன்று, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீனாவை சேர்ந்த வாங் என்பவர் ‘Brother Three Thousand’ என்ற டிக்டாக் பக்கத்தின் மூலமாக பிரபலமானவர் ஆவார். இவர் டிக்டாக்கில் பல விதமான சவால்களை ஏற்று நேரலையில் செய்து காட்டி அனைவரது பாராட்டையும் பெற்று வந்தவர்.இவரது பக்கத்திற்கு டிக்டாக்கில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிக்டாக் நேரலையில் ஏழு மது பாட்டில்களை தொடர்ந்து […]

இலங்கை

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது – சந்திம வீரக்கொடி

  • May 24, 2023
  • 0 Comments

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  நாட்டின் தற்போதைய நிலையையிட்டு கவலையடைய வேண்டும்.ஒரு தரப்பினரின் நோக்கத்துக்கு அமைய செயற்படாத காரணத்தால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவே […]

வட அமெரிக்கா

சிறையிலிருந்து தப்பித்து செல்ல கோடீஸ்வரர் போட்ட திட்டம்..

  • May 24, 2023
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்ட ஒரு கோடீஸ்வரர், சிறார் பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்கச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து தப்பிக்க பெரிய திட்டம் தீட்டியுள்ளார். இரட்டைக் குடியுரிமை கொண்டவரான John Manchec (78) ஒரு கோடீஸ்வரர். அவர் அமெரிக்கச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து தப்புவதற்கு பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.அவருக்கு உடந்தையாக சில சிறை ஊழியர்களும், சக கைதிகள் சிலரும் திட்டத்தில் பங்கேற்க உறுதியளித்துள்ளனர்.அதாவது, தனது பணத்தைப் பயன்படுத்தி சக கைதி […]

ஐரோப்பா

உச்சக்கட்ட பதற்றங்களுக்கு மத்தியில், நோர்வே சென்ற உலகின் மிகப் பெரிய போர் கப்பல்!

  • May 24, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS Gerald R. Ford, இன்று (24) ஒஸ்லோவிற்கு சென்றுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் குறித்த கப்பலின் விஜயமானது மேலும் மோதலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கப்பலும் அதன் பணியாளர்களும் எதிர்வரும் நாட்களில் நோர்வே ஆயுதப்படைகளுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்தப் பயணம் அமெரிக்காவிற்கும் நார்வேக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவின் முக்கிய சமிக்ஞையாகும்.   மேலும் […]

இந்தியா

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான இந்திய பெண்

  • May 24, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் பெண்ணொருவர். அரிய வகை நிகழ்வாக கருதப்படும் இச் சம்பவம் மே 22ம் திகதி ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் (RIMS) மருத்துவமனையில் நடந்துள்ளது. தாயும் ஐந்து பிள்ளைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.இருப்பினும் பிள்ளைகள் போதிய அளவு எடையில் இல்லாததால் அவர்கள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் புகைப்படத்தை மருத்துவமனை அதன் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளது. உலகில் கிட்டத்தட்ட 55,000,000 […]

ஆசியா

சர்ச்சையில் சிக்கிக்கொண்ட 2 சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் – அம்பலமான இரகசியங்கள்

  • May 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ரிடவுட் வீதியில் அமைந்துள்ள 2 பங்களா வீடுகளை 2 தமிழ் அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்திருக்கும் விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் ரிடவுட் வீதிகளில் அமைந்துள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் நில ஆணையம் இம்மாதம் 12 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனிக்கப்படும் என பிரதமர் […]

ஆசியா

மூன்று பணிப்பெண்களை பணிநீக்கம் செய்த Cathay Pacific Airways நிறுவனம்!

  • May 24, 2023
  • 0 Comments

Cathay Pacific Airways விமான சேவை நிறுவனம் மூன்று பணிப்பெண்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தலைமை நிர்வாகி ரொனால்ட் லாம் அறிவித்துள்ளார். ஆங்கிலாம் பேசாதவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்மேற்மகு சீன நகரமான செங்டுவில் இருந்து ஹாங்காங்கிற்கு CX987 என்ற விமானம் பயணித்தது. குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ஆங்கிலத்தில் போர்வைக்கு பதிலாக கார்பெட் கேட்டதற்காக […]

இலங்கை

மின் கட்டண திருத்தத்திற்கான உத்தேச கட்டண விகிதங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

  • May 24, 2023
  • 0 Comments

மின் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜுலை மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான உத்தேச விகிதங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். தற்போதைய மின் கட்டணத் திருத்தத்தின்படி, உள்நாட்டுப் பிரிவில் முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு வசூலிக்கப்படும் கட்டணம்  05 ரூபாயாகும்.   அந்த வகையில் ஒரு மின்சார யூனிட்டுக்கான புதிய கட்டணம் 25 ரூபாயாகும். இதற்கிடையில், நுகரப்படும் முதல் 30 யூனிட்டுகளுக்கான நிலையான கட்டணம்  250 ரூபாவாகும். இந்த […]

You cannot copy content of this page

Skip to content