இந்தியா

பயணி வாந்தி எடுத்ததால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!

இந்தியாவின் மும்பை மாநகரிலிருந்து திங்கட்கிழமை இரவு ராஞ்சி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், நாக்பூர் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவ்விமானம் நாக்பூரில் தரையிறங்கியது. நீண்டநாள் சிறுநீரகக் கோளாற்றாலும் காசநோயாலும் பாதிக்கப்பட்டிருந்த அந்த 62 வயது ஆடவர் விமானத்திலேயே ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, நாக்பூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பயணி, பின்னர் மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது. 6E 5093 என்ற அவ்விமானம் மருத்துவக் காரணத்திற்காக நாக்பூரில் தரையிறக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனப் […]

இலங்கை

சிங்கப்பூர்- இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் கைச்சாத்து

  • August 22, 2023
  • 0 Comments

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுக்களை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் அவதானம் செலுத்தியிருந்ததோடு, பரந்த பொருளாதார ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. […]

இலங்கை

குடிநீர் தேவையை அவசர சேவையாக கருத தீர்மானம்!

  • August 22, 2023
  • 0 Comments

குடிநீரின் தேவையை அவசர சேவையாக  கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, அவசர நடவடிக்கை குழுவின் ஊடாக கூட்டு விரைவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளததாகவும் அவர் கூறியுள்ளார். நீர் வழங்கல், நீர்ப்பாசனம், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. மேற்படி மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, அது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஐரோப்பா

கிளர்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட பிரிகோஜின்!

  • August 22, 2023
  • 0 Comments

கடந்த ஜூன் மாத இறுதியில் வெடித்த முழுமையற்ற எழுச்சிக்குப் பிறகு, ரஷ்ய வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் முதல் முறையாக வீடியோ அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். வாக்னர் குழுவைச் சேர்ந்த டெலிகிராம் சேனல்கள் மூலம் பரப்பப்பட்ட இந்த வீடியோ, ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வாக்னர் குழுமத்தின் தலைவர் இப்போது ஆப்பிரிக்காவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆபிரிக்காவில் மோதல்கள் நிறைந்த மாநிலங்களில் வாக்னர் குழுவின் செயல்பாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் தற்போதைய செயல்பாடு பற்றிய […]

வட அமெரிக்கா

ஆளில்லா தீவில் 3 நாட்களாக சிக்கித் தவித்த நபர் – மீட்ட அமெரிக்க கடலோர காவல் படை

  • August 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்கு பகுதியில் பஹாமாஸ் உள்ளது . தீவு நாடான பஹாமாசின் கட்டுப்பாட்டில் உள்ள கேசால் என்ற ஆள்நடமாட்டம் இல்லாத சிறிய தீவில் மூன்று நாட்களாக சிக்கித்தவித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 64 வயது நிரம்பிய அந்த நபர் பஹாமாசைச் சேர்ந்தவர். அவர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டபோது படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது. அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். அத்துடன், அவசரகால சூழ்நிலைகளில் […]

உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமர் நியமனம்!

தாய்லாந்தின் புதிய பிரதமராக ஷ்ரத்தா தவிசின் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்திற்கு வழி வகுத்தது மற்றும் பல வாரங்களாக நிலவும் நிச்சயமற்ற மற்றும் அரசியல் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  

ஆசியா

வெள்ள நிலைமைகளை பார்வையிட்டார் வடகொரிய ஜனாதிபதி!

  • August 22, 2023
  • 0 Comments

வடகொரியத் தலைவர் தமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சூழலின் போது பயிர்களைக் காப்பாற்ற அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். அந்த அதிகாரிகள் வடகொரியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டனர் என்று கிம் ஜாங் உன் கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கு அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறினார். வெள்ளத்தால் அழிந்த வயல்களை அவதானித்த அவர்,  பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மீது அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

பொழுதுபோக்கு

முதல்முறையாக ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணையும் ‘Mr.X’ அப்டேட் வெளியானது…

  • August 22, 2023
  • 0 Comments

ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும்  ‘Mr.X’ படத்தின் ஷட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. முதல்முறையாக ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘Mr.X’. இரு கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தை ‘எப்.ஐ.ஆர்’ படத்தை  இயக்கிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார். இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் […]

தமிழ்நாடு

கர்ப்ப காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை : உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • August 22, 2023
  • 0 Comments

மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் […]

இலங்கை

இலங்கையின் வெப்பச்சுட்டெண் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ‘ஆம்பர்’ எச்சரிக்கையுடன் கூடிய வெப்ப சுட்டெண் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நீண்ட நேரம் செயல்படுவது அல்லது வெயிலில் வெளிப்படுதல் சோர்வை ஏற்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் வெப்ப பிடிப்பு ஏற்படலாம் […]