தைவானுக்கு 500 மில்லியன் டொலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்க பைடன் அரசு ஒப்புதல்
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது. இந்நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. நவீன எப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவை அதில் அடங்கும். […]