மணிகண்டனின் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, ‘பருத்திவீரன்’ சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் […]