வாழ்வியல்

மாரடைப்பை ஏற்படுத்தும் உணவு – தவிர்க்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து

  • August 28, 2023
  • 0 Comments

தற்போதைய நம்முடைய உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் பல சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் சர்க்கரை நோய், உடற்பருமன், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற ஆபத்தான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, நாம் நம்முடைய உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய நவீன மயமாக்கலால் எங்கு பார்த்தாலும் பதப்படுத்தப்பட்ட, செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளே நிரம்பியுள்ளன. இது இதய நோயின் ஆபத்தை இரு மடங்காக்குகிறது. குறிப்பாக உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற […]

இலங்கை

இலங்கையில் சனத்தொகையில் 4 வீதமானவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • August 28, 2023
  • 0 Comments

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மனநல வைத்திய நிபுணர்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முறையான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும், நீரிழிவு, உயர் இரத்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

YouTube அறிமுகம் செய்யும் புதிய வசதி!

  • August 28, 2023
  • 0 Comments

ஒரு பாடலை ஹம்மிங் செய்தோ அல்லது அந்த குறிப்பிட்ட பாடலை ரெக்கார்டிங் செய்வதன் மூலம், யூடியூப்பில் அது என்ன பாடல், பாடலின் வரிகள் என்ன என்பதை சுலபமாக கண்டுபிடிப்பதற்கான அம்சத்தை சோதித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதால் சிறிய குழுவிலான பயனர்களுக்கு மட்டுமே இது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டில் யூடியூப் பயன்படுத்தும் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு இது கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அம்சம் தற்போது […]

ஆசியா

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் மீண்டும் அறிமுகமாகும் சேவை

  • August 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் hot towel வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து SIA விமானங்களிலும் அந்த சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என சொல்லப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் குறைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டது. Suites, first-class மற்றும் business-class பிரிவுகளுக்கு வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் hot towel சேவை மீண்டும் தொடங்கப்படும். பிரீமியம் […]

ஐரோப்பா

நேட்டோவுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்!

  • August 28, 2023
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருகின்றது. அதனை கூறி அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மக்கள் போராட்டம் நடத்தினர். சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ நடத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். போர் வேண்டாம், அமைதியே வேண்டும், ஆயுதங்கள் அமைதியை தராது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றனர். லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நேட்டோ போர் நடத்தியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் பிற […]

இலங்கை

இலங்கையில் திருமண நிகழ்வில் திடீர் மரணமடைந்த யுவதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • August 28, 2023
  • 0 Comments

ஹொரணை – பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு நண்பர்களுடன் நடனமாடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை […]

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு

  • August 28, 2023
  • 0 Comments

கடும் பனிமூட்டம் காரணமாக மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வரும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாகும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஒரு விமானம் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை என மெல்போர்ன் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஐரோப்பா

தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • August 28, 2023
  • 0 Comments

தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், மின்னிலக்கச் சேவைகள் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமடையும். Metaவின் Facebook, Instagram தளங்கள், ByteDanceஇன் TikTok, Apple நிறுவனத்தின் App Store, இலோன் மஸ்க்கின் X, சில Google சேவைகள் எனப் பல நிறுவனங்கள் சில விதிகளுக்கு இணங்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் பதிவுகள் பரவுவதைத் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஒரே நாளில் மூன்று பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

  • August 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஒரே நாளில் மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Strasbourg (Bas-Rhin) நகரில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அவர் மூன்று இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். முதலாவது சம்பவம் Boulevard Sébastopol வணிக வளாகத்துக்கு அருகே திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் […]

ஐரோப்பா

ஜெர்மனியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெளிநாட்டவர்களை எதிர்பார்க்கும் நிலை

  • August 28, 2023
  • 0 Comments

தொழிற்பயிற்சி பெறுகின்றவர்களின் எண்ணிக்கை என்பது குறைவடைந்து வருவதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் தொழிற்பயிற்சி பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கையானது தற்பொழுது படிப்படியாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்பொழுது 1.2 மில்லியன் பேர் இவ்வாறு தொழிற்கல்வியை மேற்கொள்வதாகவும் இதேவேளையில் கடந்த ஆண்டு மட்டும் 469900 பேர் இவ்வாறு தொழிற்கல்வியை ஆரம்பித்ததாக தெரியவந்து இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா காலத்துக்குமுற்பட்ட காலங்களில் தொழிற்கல்வியை பெற ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கையானது 544000 பேர் ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனாவிற்கு பிற்பட்ட காலங்களில் இவ்வாறு தொழிற் பயிற்சிகளை பெறுகின்றவர்களுடைய […]