அறிவியல் & தொழில்நுட்பம்

YouTube அறிமுகம் செய்யும் புதிய வசதி!

ஒரு பாடலை ஹம்மிங் செய்தோ அல்லது அந்த குறிப்பிட்ட பாடலை ரெக்கார்டிங் செய்வதன் மூலம், யூடியூப்பில் அது என்ன பாடல், பாடலின் வரிகள் என்ன என்பதை சுலபமாக கண்டுபிடிப்பதற்கான அம்சத்தை சோதித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதால் சிறிய குழுவிலான பயனர்களுக்கு மட்டுமே இது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டில் யூடியூப் பயன்படுத்தும் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு இது கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த அம்சம் தற்போது iOS பயனாளர்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. மேலும் இந்த அம்சத்தை யூடியூப் எப்பொழுது வெளியிடும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த அம்சத்திற்கான ஆக்சஸ் வைத்திருக்கக் கூடிய நபர்கள் யூடியூப் வாய்ஸ் சர்ச் பயன்படுத்தி புதிய பாடல் தேடுவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் தேட நினைக்கும் பாடலை ஹம் செய்தோ அல்லது ரெக்கார்ட் செய்தோ காட்டலாம்.

நீங்கள் தேடும் பாடலை யூடியூப் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் மூன்று வினாடிகள் அல்லது அதற்கும் அதிகமான வினாடிகள் அந்த பாடலை ரெகார்ட் செய்திருக்க வேண்டும். பாடலை யூடியூப் அடையாளம் கண்டதும் அந்த பாடலுக்கான தகுந்த அதிகாரப்பூர்வ மியூசிக் கன்டன்ட், பயனர் உருவாக்கிய வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் போன்றவை யூடியூப் அப்ளிகேஷனில் காண்பிக்கப்படும்.

கூகுள் ஏற்கனவே இந்த அம்சத்தை 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திவிட்டது. அதன் மூலமாக கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் சர்ச் அப்ளிகேஷன் பயன்படுத்தி நம் மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை ஹம்மிங் செய்து கண்டுபிடிக்கலாம். நாம் ஹம்மிங் செய்வதன் அடிப்படையில் கூகுள் மெஷின் லெர்னிங் பயன்படுத்தி பாடல்களை அடையாளம் கண்டுபிடிப்பதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content