வட அமெரிக்கா

இந்தியாவின் பிரபல ரவுடி கனடாவில் சுட்டுக் கொலை..

  • May 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல ரவுடி சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் கனடாவில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வெளியேறிய போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடா பொலிஸாரின் மிகவும் கொடூரமான ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்த 28 வயதுடைய பஞ்சாப்-ஐ பூர்விகமாக கொண்ட பிரபல ரவுடி சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் ஆகிய இருவரும் கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து […]

பொழுதுபோக்கு

அஜித் மச்சானுடன் கவர்ச்சிக்கன்னி?? வெளியான புகைப்படத்தால் பெரும் பரபரப்பு

  • May 29, 2023
  • 0 Comments

நடிகை ஷாலினியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் ரிஷி தொடர்பில் தற்போது சர்ச்சையான செய்தி ஒன்று இணையத்தில் வலம் வருகின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்கிற சகோதரரும் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்துள்ளனர். ஷாலினியின் தங்கை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக நடித்த ஒரே திரைப்படம் வீர சிவாஜி. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக […]

ஐரோப்பா

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயார் – பிரித்தானியாவின் ரஷ்ய தூதர்

  • May 29, 2023
  • 0 Comments

ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என்று, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின், கடந்த மே 28ம் திகதி பிபிசிக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை பற்றி பேசியுள்ளார்.அதில் ‘ரஷ்யா உக்ரைனுடனான போரில் அமைதியை விரும்புகிறது, ஆனால் சில நிபந்தனைகள் உள்ளது, முதலாவதாக உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் வரக்கூடாது. இரண்டாவதாக உக்ரைனில் ரஷ்யர்களை மோசமாக நடத்துகிறார்கள், குறிப்பாக பெல்ஜியத்தில் […]

இலங்கை

தொடர்ந்து வலுப்பெறும் இலங்கை நாணயம் : இன்றைய நாணய மாற்று விகிதம்!

  • May 29, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா இன்று (மே 29) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய கொள்முதல் விலை  289.89 ரூபாவாகவும், விற்பனை விலை 303. 26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

ஐரோப்பா

ரஸ்யா பெலாரசின் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

  • May 29, 2023
  • 0 Comments

ரஸ்யா பெலாரசின் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என பெலாரசின் ஜனாதிபதி அலெக்ஸான்டர் லுகாசென்கோ தெரிவித்துள்ளார். மொஸ்கோவிலிருந்து மின்ஸ்கிற்கு சில அணுவாயுதங்களை மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் ரஸ்ய பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு அணுவாயுதங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான பெலாரஸ் ஜனாதிபதி பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.ரஸ்யாவிற்கும் எங்களிற்கும் இடையில் உள்ள உறவுகள் போல வேறு எந்த நாடும் நெருக்கமான உறவை […]

மத்திய கிழக்கு

சூடானில் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல்!

  • May 29, 2023
  • 0 Comments

சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிற்கு எதிராக யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. செய்மதி படங்கள் உட்பட பல விடயங்களை பயன்படுத்தி பிபிசியின் குழுவினர் மருத்துவமனைகள் இலக்குவைக்கப்படுகின்றன என்ற முடிவிற்கு வந்துள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளர்கள் காணப்படும் வேளையில் மருத்துவமனைகள் ஆட்டிலறி ரொக்கட் தாக்குதல்களுக்குள்ளாகின்றன எனவும்,  வைத்தியர்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூடான் தலைநகர் கார்ட்டோமில் உள்ள 88 மருத்துவமனைகளில் ஒரு சில மருத்துவமனைகள் மாத்திரமே […]

இலங்கை

843 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு

  • May 29, 2023
  • 0 Comments

இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான பண வரம்பு தேவையை நீக்கியுள்ளது. இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப்பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

இங்கிலாந்தில் குத்திக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவன்- சம்பவம் தொடர்பில் வெளியான காரணம்

  • May 29, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் அவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் என்னும் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.இந்த துயர சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். […]

உலகம்

வானில் நட்சத்திரங்கள் மறைந்துவிடும் அபாயம்!

  • May 29, 2023
  • 0 Comments

நட்சத்திரங்களை இன்னும் 20 ஆண்டுகளில் காண முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிச்சத்தினால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேடு அதற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது. LED வகை விளக்குகளின் பயன்பாடு, சாலையில் அதிகமான விளக்குகள், விளம்பரங்கள், இரவில் ஒளியூட்டப்படும் விளையாட்டுத் தளங்கள் ஆகியவற்றால் அதிகமான நட்சத்திரங்களைப் பார்க்க முடிவதில்லை. இரவு வானமும் சுற்றுச்சூழலில் ஓர் அங்கம் என்றும் அடுத்த தலைமுறையினரால் அதைக் காண முடியவில்லை என்றால் அது மிகப்பெரிய இழப்பு என்றும் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறினார். […]

பொழுதுபோக்கு

கமலின் புதிய அவதாரம்!! எப்படி இருக்கின்றார் பாருங்கள்…

  • May 29, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகப் பெரிய தலைகளில் ஒருவர். ஆடவும், பாடவும், எழுதவும், இயக்கவும், என்னவோ பல பரிமாணக் கலைஞராவார். தற்போது, பிரபல இயக்குனரான ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கமல்ஹாசனின் சமீபத்திய அவதாரம் ஒரு புகைப்படக்காரர். இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் தனது கேமராவில் தன்னைப் பற்றிய படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை, கமல் ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் தோற்றத்தில் காணப்பட்ட […]

You cannot copy content of this page

Skip to content