இலங்கை

இலங்கையில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

  • August 29, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்ட மின்சார பஸ்களின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 200 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 27.02.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மேல்மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் சார்பில் இயங்கும் 50 மின்சாரப் பேருந்துகளை அரச தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்திட்டத்தின் மூலம்  எதிர்பார்க்கப்படும் நன்மைகளை அடைவதற்கு   உத்தேச திட்டத்தின் […]

இலங்கை

பொலிஸ் காவலில் வீட்டுப் பணிப்பெண் மரணம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஆர்.ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட வெலிக்கடைப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தமக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, அவரது முதலாளியும் பிரபல […]

இலங்கை

யாழில் போதை கும்பலின் ஒன்றுகூடல் மையங்களாக மாறி வரும் பாழடைந்த வீடுகள்

  • August 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் பகுதி, மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்கள் அற்று , பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள் , அந்த வீடுகளில் கும்பல் கும்பலாக போதை பொருட்களை நுகர்ந்து கொள்கின்றனர். அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் […]

ஆசியா

டொயோட்டா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியது!

  • August 29, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜப்பானில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. உற்பத்தி நடவடிக்கையில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் காரணமாக உலகிலேயே அதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி ஜப்பானில் இன்று (29.08) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் ஆக்சஸெரீகளுக்கான ஆர்டர்களை ஃபார்வேர்டு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பிழையை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து […]

இலங்கை

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ தேர் திருவிழா!

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவ தேர் திருவிழாவின் 14 நாள் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு அங்கபிரதிஸ்ரை,செதில் காவடி,பறவை காவடி,கற்பூர […]

இலங்கை

யாழில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து சம்பலாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து சம்பலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா

உலகிலேயே முன்முறையாக… மனித மூளையில் உயிருள்ள புழு

  • August 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஒரு ஏரிக்கரை அருகில் வசித்து வந்த 64 வயது பெண்மணிக்கு நீண்ட நாட்களாக உடல் ஆரோக்கியத்தில் பல குறைபாடுகள் இருந்து வந்தன. நிமோனியா எனப்படும் மார்புச்சளி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் மாத்திரை, மருந்துகளால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. 2021 ஜனவரி மாத கடைசியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]

இலங்கை

இலங்கையில் விசா முறையை இலகுப்படுத்த தீர்மானம்!

  • August 29, 2023
  • 0 Comments

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வீசா முறையை இலகுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தற்போதைய விதிமுறைகளின்படி, இந்த நாட்டில் வருகை விசா, குடியிருப்பு விசா மற்றும் போக்குவரத்து விசா என மூன்று வகையான விசாக்கள்  வழங்கப்படுகின்றன. அவற்றுள், விசிட் விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகை விசாக்களின் வழங்கல் நடைமுறைகள் சிக்கலானவை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக வெளிநாட்டு ஈர்ப்பு உள்ள நாடுகளில் நடைமுறையில் உள்ள விசா முறைகளை […]

இலங்கை

சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு!

  • August 29, 2023
  • 0 Comments

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 06’ இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மேலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

ஆசியா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது. இம்ரான் கானை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, செவ்வாய்க்கிழமை அவர் சிறையில் இருந்து வெளியேறுவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தண்டனையின் […]