இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்!

1.5 மில்லியன் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமடிங்க தெரிவித்தார். உதவி தேவைப்படும் இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உள்ளது என்றார். இதன்படி முதற்கட்டமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இதற்கிடையில், வார நாட்களில் […]

இலங்கை

யாழில் ஹெரோயினை ஊசி மூலம் நுர்ந்த இளைஞர் ஒருவர் பலி!

  • August 29, 2023
  • 0 Comments

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அதேவேளை […]

உலகம்

அமெரிக்காவில் பிடிப்பட்ட இராட்சத முதலை!

  • August 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நான்கு மீற்றருக்கும் அதிக நீளமுள்ள முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நான்கு வேட்டைக்காரர்களால் சுமார் ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின் குறித்த முதலை யாஸூ ஆற்றில் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதலை வேட்டை பருவத்தின் தொடக்க நாளில் பிடிக்கப்பட்ட இந்த முதலையின் எடை 364 கிலோ என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய கிழக்கு

அமைதியான பயணத்தை விரும்புவோருக்கு ‘அடல்ட் ஒன்லி’ பகுதி- கோரண்டன் ஏர்லைன்ஸ் புதிய திட்டம்

  • August 29, 2023
  • 0 Comments

விமானங்களில் பயணம் செய்யும்போது சிலர் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். குழந்தைகள் அழுகை சத்தமும் அவ்வப்போது கேட்கும். இதுபோன்ற சூழல், அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். சில சமயங்களில் இது தொடர்பாக வாக்குவாதமும் ஏற்படுகிறது. எனவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற பகுதியை கோரண்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வழங்குகிறது. குழந்தைகளின் சத்தம் இல்லாத […]

ஆசியா

சீனாவில் தம்பதிகளுக்கு வழங்கப்படும் வெகுமதி!

  • August 29, 2023
  • 0 Comments

கிழக்கு சீனாவில்  மணப்பெண்ணின் வயது 25 அல்லது அதற்கு குறைவானதாக இருந்தால் தம்பதிகளுக்கு 1,000 யுவான் ($210) “வெகுமதி” வழங்குவதாக அறிவித்துள்ளது. குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா மேற்கொள்ளும் முயற்சிகளில் இது சமீபத்திய நடவடிக்கையாகும். ஏற்கனவே குழந்தைகளைப் பெற்றுள்ள தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்பு, கருவுறுதல் மற்றும் கல்விக்கான மானியங்களையும் சீன அரசு வழங்கியுள்ளது. ஆறு தசாப்தங்களில் நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து சீனாவின் பிறப்பு விகிதத்தை உயர்த்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதன்படி  […]

இலங்கை

தண்ணிமுறிப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள்!! கண்ணீருடன் தாய்யொருவர் விடுத்துள்ள கோரிக்கை

நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய தாய்யொருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். தண்ணிமுறிபபு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர். குறித்த கள விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தாய்யொருவர் கூறுகையில், […]

உலகம்

IMF தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நாளை சீனா பயணம்!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, புதன்கிழமை சீனாவுக்கு விஜயம் செய்வார் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை, சீனாவின் மூத்த தலைமைக் குழுவுடன் இருதரப்பு விவாதங்களில் ஈடுபட, நிர்வாக இயக்குநர் சீனாவுக்குச் செல்வார்” என்று IMF செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தபோது, ஜார்ஜீவா, 2023 “மற்றொரு சவாலான ஆண்டாக” இருக்கும் என்றும், நிச்சயமற்ற தன்மை “விதிவிலக்காக உயர்ந்தது” என்றும் […]

ஐரோப்பா

பிரான்ஸ் தூதரை வெளியேற உத்தரவு – நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிலடி

  • August 29, 2023
  • 0 Comments

நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான். நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.பிரான்ஸ் தூதரான Sylvain Itté, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக ராணுவ அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. […]

வட அமெரிக்கா

கனடியர்களின் ஆயுட்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்…

  • August 29, 2023
  • 0 Comments

கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயதுகளிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது.இதேவேளை கனடாவில் இறப்பு வீதமும் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்று ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன.கனடிய புள்ளி விபரவியல் […]

பொழுதுபோக்கு

300 கிலோ போதைப் பொருள் கடத்தலில் சரத்குமார் வரலட்சுமிக்கு தொடர்பா? கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு

  • August 29, 2023
  • 0 Comments

கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021-ம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரித்து வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், லிங்கம் என்கிற ஆதிலிங்கம் என்பவரை சென்னை சேலையூரில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். […]