பொழுதுபோக்கு

சென்னையில் நடைபெறும் “ஜவான்”.. ரசிகர்கள் உற்சாகம்

  • August 30, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘ஜவான்’ படத்தின் […]

இலங்கை

வாகரையில் வாகன விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம் !

  • August 30, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி​ விபத்துக்குள்ளாகினர். இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக […]

விளையாட்டு

பாரிய எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கும் ஆசிய கோப்பை தொடர்

  • August 30, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பாகிஸ்தானில் முல்தானில் நடைபெறுகிறது. இதில், உலக நம்பர் 1 ஒருநாள் அணியான பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் 2023 ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் ‘ஹைப்ரிட் மாடலில்’ பாகிஸ்தானும், இலங்கையும் இணைந்து தொடருக்கான போட்டிகளை நடத்துகின்றன.இன்று தொடங்கும் ஆசிய கோப்பை […]

இலங்கை

இலங்கையில் முக்கிய செயற்பாட்டை நிறுத்தும் பேஸ்புக்!

  • August 30, 2023
  • 0 Comments

இலங்கையில் எண்ட்ராய்டு பயனர்களுக்கு குறைந்த திறன் பயன்படுத்தும் மெசஞ்சர் லைட் அப்ளிகேஷனை நீக்க பேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் தற்போதைய பயனர்கள் இதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Messenger Lite அப்ளிகேஷன், அதன் சிறிய திறன் 01 மெகாபைட் காரணமாக மிகவும் பிரபலமானது. இந்த அப்ளிகேஷன் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 05 நாடுகளில் இலங்கையும் […]

இலங்கை

யாழில் கத்தியுடன் சிக்கிய பல்கலைக்கழக மாணவன்!

  • August 30, 2023
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமைக்காகவே அம்மாணவன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

“யாரும் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம்” ராகவா லாரன்ஸ் ஓப்பன் டாக்

  • August 30, 2023
  • 0 Comments

பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதில் என்னுடைய ட்ரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என்னுடைய குழந்தைகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். https://twitter.com/offl_Lawrence/status/1696399159354622420

ஐரோப்பா

7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கிய பின்லாந்து

  • August 30, 2023
  • 0 Comments

இந்த ஆண்டு சர்வதேச மாணவர்கள் படிப்பு நோக்கங்களுக்காக சமர்ப்பித்த குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பின்லாந்து அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். பின்லாந்து குடிவரவு சேவையின் தகவலுக்கமைய, 2023 ஜூலை இறுதிக்குள், மொத்தம் 8,762 ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மாணவர்கள் குடியிருப்பு அனுமதிக்கான முதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர். மேலும், அதே காலகட்டத்தில், பின்லாந்து மொத்தம் 7,039 முதல் குடியிருப்பு அனுமதிகளை பெற்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், படிப்பு நோக்கங்களுக்காக 5,911 குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை பின்லாந்து […]

வாழ்வியல்

அளவிற்கு அதிகமாக முட்டை சாப்பிடுபவரா நீங்கள் – ஆபத்து

  • August 30, 2023
  • 0 Comments

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நிச்சயமாக, முட்டை மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை ஆனால், தினசரி உட்கொள்ளும் போது அளவொடு தான் உட்கொள்ள வேண்டும். அந்த அளவு நபரின் வாழ்க்கை முறை பழக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் வகை போன்ற சில காரணிகளைப் பொறுத்தது. முட்டையின் மஞ்சள் கரு விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம் அழகற்றவர்களுக்கு, முட்டைகள் அவர்களுக்குத் தேவையான புரதத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். உணவியல் நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தினமும் இரண்டு முட்டைகளுக்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களின் சராசரி ஓய்வு வயது உயர்வு!

  • August 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களின் சராசரி ஓய்வு வயது உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. புள்ளியியல் பணியகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவு சராசரி ஓய்வூதிய வயது இப்போது 56 வயதுக்கு மேல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. 2018 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியப் பெண்களின் சராசரி ஓய்வு வயது 52 ஆக இருந்தது, தற்போது 54 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஆண்களுக்கான ஓய்வு வயது 59 ஆகவே உள்ளது, ஆனால் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 673,000 பேர் […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு கிடைத்த அரிய வெற்றி

  • August 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ராமலிங்கம் முருகன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். 37 வயதான முருகன், லொரியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்த நிலையில் தற்போது அதில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். 24 பேருடன் பின்புறத்தில் வேலையிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறங்கும் போது கீழே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது அது கடமையை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ஊழியர் முருகன் தரப்பு வழக்கறிஞர் முஹம்மது […]