இந்தியா

காஷ்மீரில் யாத்திரைக்குச் சென்ற பேருந்து விபத்து : 10 பேர் பலி!

  • May 30, 2023
  • 0 Comments

காஷ்மீரில் உள்ள புனித தலமொன்றுக்கு யாத்திரைச் சென்ற பேருந்தொன்று இமயமலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 55 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. வட மாநிலமான பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து கத்ரா நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஜம்மு நகருக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக  போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி சந்தன் கோஹ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இறந்தவர்கள் இந்தியாவின் கிழக்கு பீகார் மாநிலத்தைச் […]

ஐரோப்பா

கிரேக்கத்தின் உயர்நிலைப் பள்ளியின் தேர்வுத் தளத்தை முடக்க சைபர் தாக்குதல்!

  • May 30, 2023
  • 0 Comments

கிரேக்கத்தின் உயர்நிலைப் பள்ளியின் தேர்வுத் தளத்தை முடக்கும் நோக்கில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. சேவை மறுப்பு, அல்லது DDoS, தளத்தை மூழ்கடிக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 114 நாடுகளைச் சேர்ந்த கணினிகள் ஈடுபட்டுள்ளன, இதனால் உயர்நிலைப் பள்ளி தேர்வுகளில் செயலிழப்புகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டன என கல்வி அமைச்சகம் விவரித்துள்ளது. சைபர் தாக்குதல்கள், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உதவியைப் பெற, உச்ச நீதிமன்றத்திடம் […]

பொழுதுபோக்கு

யாருக்கும் தெரியாமல் அஜித் செய்துவரும் செயல் அம்பலம்!!

  • May 30, 2023
  • 0 Comments

சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது தொட முடியாத அளவிற்கு உச்சத்திற்கு இருக்கும் அஜித், ஆரம்பத்தில் இருந்தே அரசியலை ஒதுக்கிய அவர் தற்போது பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாக செய்திருக்கும் வேலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெய்சங்கருடைய மூத்த மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக உள்ள நிலையில், இளையமகன் சஞ்சய் சங்கர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். விஜய் சங்கர் சினிமாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இலவசமாக […]

ஆசியா

மோசமாகி வரும் சீனா – அமெரிக்கா உறவு : பாதுகாப்பு மாநாட்டில் இருதரப்பு சந்திப்பு நடைபெறுமா?

  • May 30, 2023
  • 0 Comments

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் புதுப்பிக்கப்பட்ட உயர்மட்ட இராணுவ உரையாடலுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கபூரில் நடைபெறும் இறுதி பாதுகாப்பு மாநாட்டில், சீனா மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் தலைவர்கள் இருதரப்பு சந்திப்பை நடத்தமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வாஷிங்டன் “சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்கள் மற்றும் கவலைகளை அக்கறையுடன் மதிக்க வேண்டும், உடனடியாக தவறுகளை சரிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இரு இராணுவத்தினரிடையே உரையாடல் மற்றும் […]

இந்தியா

மணமகளுக்காக 13 நாட்கள் மண்டபத்திலே காத்திருந்த மணமகன்!

  • May 30, 2023
  • 0 Comments

ராஜஸ்தானில் திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மணமகள் காதலனுடன் ஒடிவிட்ட நிலையில், 13 நாட்கள் மணமகன் மண்டபத்தில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் […]

ஐரோப்பா

கொசோவோவில் நேட்டோ வீரர்களுக்கும், செர்பிய இனத்தவருக்கும் இடையில் மோதல்!

  • May 30, 2023
  • 0 Comments

கொசோவோவில் நேட்டோ தலைமையிலான அமைதி காக்கும் படைக்கும், செர்பியர் இனத்தவருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 30 தஇற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். வடக்கு கொசோவோவில் உள்ள நகராட்சிகளில் ஒன்றின் அலுவலகங்களைக் கைப்பற்ற செர்பியர்கள் முயன்றுவருகின்றனர்.  அங்கு அல்பேனிய இன மேயர்கள் கடந்த வாரம் தங்கள் பதவிகளை ஏற்றனர். இதனையடுத்து மோதல் வெடித்தது. இந்த மோதலில், 11 இத்தாலிய வீரர்கள், 19 ஹங்கேரிய வீரர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பிரிஸ்டினாவிற்கு வடக்கே 45 […]

வட அமெரிக்கா

12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

  • May 30, 2023
  • 0 Comments

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில் காணாமல் போயிருந்தார்.20 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிறந்த நாள் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மெடிசனை இறுதியாக பார்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரணம் தொடர்பில் […]

இலங்கை

16 வயது சிறுமியின் அரைநிர்வாணப் புகைப்படங்களுடன் பெண் ஒருவர் கைது!

  • May 30, 2023
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒருவர் உலகளாவிய ரீதியில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் அங்கத்தவர் என்பதுடன் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தேசிய ஊடகப் பணிப்பாளரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் […]

இந்தியா

பிரபல நடிகை அகன்ஷா துபேயின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

  • May 30, 2023
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுவயது முதலே நடனம், நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அகன்ஷா துபே, டிக்டாக்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான அகன்ஷா துபேவுக்கு மில்லியன்கணக்கான பாலோவர்கள் இருக்கின்றனர்.தொடர்ந்து மொடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 வயதில் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்து வந்த அகன்ஷா துபே, வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது கடந்த மார்ச் மாதம் 26ம் […]

ஐரோப்பா

அமெரிக்காவில் தேசிய நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – 16 பேர் பலி!

  • May 30, 2023
  • 0 Comments

அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர். இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. பலர் காயமடைந்துள்ள நிலையில், […]

You cannot copy content of this page

Skip to content