பொழுதுபோக்கு

ரஜினி 170 – ல் ‘பாகுபலி’ வில்லன்…. புதிய அப்டேட்

  • August 31, 2023
  • 0 Comments

ரஜினிகாந்தின் 170வது படத்ததில் தெலுங்கு நடிகர் ராணா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். முதற்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படத்தை […]

வட அமெரிக்கா

கனடாவில் 5 மில்லியன் தேனீக்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி… மீட்கும் பணி தீவிரம்

  • August 31, 2023
  • 0 Comments

கனடாவின் ஒன்ட்டாரியோ மாநிலத்தில் டிரக்கிலிருந்த சுமார் 5 மில்லியன் தேனீக்களைக் கொண்ட தேன் கூடுகள் விழுந்ததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தேனீக்களை கட்டிவைத்திருந்த பட்டைகள் தளர்ந்ததால் அவை விழுந்தன. வீதி முழுவதும் எங்கிருக்கிறோம் என்பது புரியாத நிலையில் கோபத்துடன் தேனீக்கள் பறந்தன. ஓட்டுநர்களுக்கு வாகனச் சன்னல்களை மூடி வைக்குமாறும் பாதசாரிகளுக்கு அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. தேனீக்களைக் கையாளக் காவல்துறை அதிகாரிகள் தேனீக்கள் வளர்ப்பவர்களைத் தொடர்புகொண்டதாக நிலையில் அவ்விடத்தில் 12 […]

வாழ்வியல்

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்…? மாரடைப்பு ஏற்படும் அபாயம்

  • August 31, 2023
  • 0 Comments

சமகாலத்தில், வாழ்வியல் மாற்றங்கள், பணி சார்ந்து பல்வேறு வகையில் நிகழ்ந்துள்ளது. இந்த மாறிய வாழ்க்கை முறையால் நீண்ட மணிநேரம் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து திரைகளின் முன் அதிக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து, பெரும்பாலான வேலைகள் ஆன்லைன் நோக்கி சென்றுவிட்டது, இதில் நன்மைகள் இருந்தாலும், குறைபாடுகளும் உள்ளது. நீண்ட நேரம் உட்காருவது உடல்நலக் கவலைகளை அதிகரிக்கிறது, இதில் மாரடைப்பு இங்கு முக்கிய ஒன்றாகும். ஒரு சில ஆய்வுகளின்படி, எட்டு மணி […]

இலங்கை

குரூந்தூர் மலை பிரச்சினை – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

  • August 31, 2023
  • 0 Comments

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்தார். துரதிஷ்டவசமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தெடர்பில் சிலருக்கு புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும், நாட்டிற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் உறுதியாக கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை […]

ஆப்பிரிக்கா முக்கிய செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் இராணுவ புரட்சி.. ஆட்சியை பிடித்ததாக அறிவிப்பு..

  • August 31, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் இராணுவத்தினர் ஆட்சியை கைபற்றியுள்ளனர். புரட்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. தலைநகர் லிப்ரெவெல்லியில் ஆட்சி கவிழ்ப்பை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜனாதிபதி தேர்தலில் அலி போங்கோ 3-வது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் ராணுவத்தினர் ஆட்சியை பிடித்ததாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர். இதனிடையே வீட்டுக்காவலில் உள்ள அதிபர் போங்கோ உதவி கோரியுள்ளார். காபோன் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – நால்வர் பலி

  • August 31, 2023
  • 0 Comments

வடகிழக்கு விக்டோரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். ஹூம் நெடுஞ்சாலையில் இன்று காலை 10.30 மணியளவில் காரும் ட்ரக் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செடான் ரக காரில் பயணித்த 04 பேரே உயிரிழந்துள்ளனர். டிரக்கின் 30 வயது சாரதியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியா

சீனாவில் சரியான வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு பணப்பரிசு!

  • August 31, 2023
  • 0 Comments

சீனாவில் சரியான வயதில் விரைந்து திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்களுக்கு பணப்பரிசு வழங்கி, அரசாங்கம் ஊக்குவிக்கும் நடைமுறையை தொடங்கி இருக்கிறார்கள். உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்டதாக திகழ்ந்த தேசம் சீனாவாகும். மக்கள்தொகையை குறைக்கும் முயற்சியில், தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்த சீனா, இன்று அடியோடு மாறிப்போயிருக்கிறது. சீனா மக்கள்தொகையில் முதலாம் இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது மட்டுமன்றி, கடந்த அரை நூற்றாண்டில் சீனா காணாத வரலாறாக அங்கே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. திருமணம் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை

  • August 31, 2023
  • 0 Comments

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசியா

மலேசியாவில் பழம் சுவையில்லாததால் நபர் செய்த அதிர்ச்சி செயல்

  • August 31, 2023
  • 0 Comments

மலேசியாவின் கூச்சிங் நகரில் நபர் ஒருவர் பழக்கடையின் சுருள்கதவைத் தம்முடைய காரால் இடித்தார். டுரியான் பழத்தின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதால் பழம் வாங்கிய கடைக்கு அந்த நபர் இந்த செயலை செய்துள்ளார். அவருக்கு நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 34 வயது Chiew Tze Wei தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுச் சேதம் ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஒகஸ்ட் 11ஆம் திகதி காலை 5.30 மணியளவில் Kempas Heights பகுதியில் அவர் அந்தக் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

10 லட்சம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தயாராகும் எலான் மஸ்க்!

  • August 31, 2023
  • 0 Comments

உலகப் பணக்காரர்களில் ஒருவரான தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் மனிதர்களை அனுப்புவதற்காக திட்டமிட்டு வருகிறார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்த திட்டத்தை 2020லேயே எலான் மஸ்க் வெளிப்படுத்தினார். வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதை இலக்காக அவர் நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் சவால் நிறைந்த இந்தப் பணியை அவர் […]