பொழுதுபோக்கு

விஜய் 68இல் இருந்து தூக்கப்பட்ட ஜோதிகா… வாய்ப்பை பிடித்த சிம்ரன்…

  • August 31, 2023
  • 0 Comments

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ஆரவாரமாக வெடிக்க போகிறது. இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி கொடுத்து, வசூல் அளவில் சாதனை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். அதற்கான வேலைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய்யை இளமையாக காட்ட நவீன டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வேலைகளும் […]

வட அமெரிக்கா

பைடன் அமெரிக்காவை 3ம் உலகப்போரை நோக்கி அழைத்துச் செல்வார்- டிரம்ப் விமர்சனம்

  • August 31, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார். இதனிடையே அமெரிக்காவில் 2024இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில், […]

ஐரோப்பா

தனது பதவியை இராஜினாமா செய்தார் பென் வாலஸ்!

  • August 31, 2023
  • 0 Comments

பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து பென் வாலஸ் முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் ரிஷி சுனெக்கிற்கு முறைப்படி கடிதம் மூலம் அறிவத்துள்ளார். குறித்த கடிதத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய ஆயுதப் படைகள் மற்றும் உறுத்துறை சேவைகளை பாராட்டியுள்ளார். உக்ரைனில் நடந்த போருக்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பை பாராட்டிய அவர், ரிஷி சுனக் அதிபராகவும் பின்னர் பிரதமராகவும் ஆயுதப்படைகளில் முதலீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் உலகம் மேலும் பாதுகாப்பற்றதாகவும் மேலும் […]

இலங்கை

யாழில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது

  • August 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார். போயா தினமான நேற்று மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 போத்தல் சாராயம் என்பன […]

இலங்கை

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

  • August 31, 2023
  • 0 Comments

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தும் பயனில்லை என அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் திரன் அலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என  அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் அதிகரித்து வருகின்ற […]

இலங்கை

இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

  • August 31, 2023
  • 0 Comments

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. இரண்டு குறுகிய தூர ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஏவுகணைகள் தென்கொரிய கடற்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆண்டுதோறும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை; குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம்

  • August 31, 2023
  • 0 Comments

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஈராக்கை மையமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தினர் சிரியாவை பாதுகாத்து வருகிறார்கள். இதனால் ஐ.எஸ். இயக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியும், ராணுவ அறிவை பகிர்ந்துகொண்டும் அமெரிக்க ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. இதில் அமெரிக்க ராணுவத்தின் உதவியை சிரிய ஜனநாயகப்படை இயக்கமும், நாட்டில் உள்ள அரபு பழங்குடியினரும் அதிக அளவில் பெறுகிறார்கள். இருவேறு கொள்கைகளை கொண்ட இரு கும்பல்களுக்குள் அவ்வப்போது மோதல் போக்கு நிலவி […]

இலங்கை

சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது!

  • August 31, 2023
  • 0 Comments

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது விநியோகத்தை நேற்று முதல் (30.08) ஆரம்பித்துள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் ஆகியவற்றை 10 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர் மே மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை

இலங்கையில் 3 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

  • August 31, 2023
  • 0 Comments

இலங்கையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று(31) முதல் எதிர்வரும் 03 நாட்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டெங்கு அபாயம் அதிகம் நிலவும் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வீடுகள் தோறும் சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் இதுவரை 61,697 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

முதல்முறையாக குழந்தைகளின் முகத்தை உலகுக்கு காட்டினார் நயன்தாரா

  • August 31, 2023
  • 0 Comments

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இறுதியாக தனது இரு புதல்வர்களின் முகங்களையும் வெளி உலகுக்கு காட்டியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 31) அன்று சமூக ஊடக தளமான Instagram இல் தனது புதல்வர்களின் படங்களை பகிர்ந்துள்ளார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிடப்பட்டுள்ள புதல்வர்களை முதன்முறையாக காட்டியுள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா. தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக […]