வீட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளை! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் திகதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம் திகதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடிற்கு உள்ளே சென்று பார்த்தபோது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் களைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்துள்ளது. […]