இலங்கை

இலங்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

  • September 3, 2023
  • 0 Comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

இத்தாலியில் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

  • September 3, 2023
  • 0 Comments

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள கட்டானியா நகரில் 42 வயதுடைய பெண் ஒருவர் கட்டடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாலை 2.30 மணியளவில் Viale Vittorio Veneto என்ற இடத்தில் உள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு வழிப்போக்கர் பொலிஸாரை அழைத்தார். சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி வந்துள்ளார். இது தற்கொலை என்று கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பா

நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியம் கூறும் 111 வயதுடைய பிரித்தானியர்

  • September 3, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் அதிக வயதான மனிதர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான ஜான் டின்னிஸ்வுட் நீண்ட நாள் வாழ்வதற்கான இரகசியத்தை பகிர்ந்துள்ளார். அவர் கடந்த ஒகஸ்ட் 26ம் திகதி தன்னுடைய 111வது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியத்தை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள லிவர்பூல் என்னும் இடத்தில் 1912ம் ஆண்டு இவர் பிறந்தார். அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலியாவிடமிருந்தும் இந்த முதியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது சவுத் போர்ட்டில் உள்ள […]

இலங்கை

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு – நெருக்கடியில் இலங்கை

  • September 3, 2023
  • 0 Comments

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலையில் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்திய உணவுப் பொருட்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளமையினால் இலங்கையும் அதன் தாக்கங்களை உணர நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலநிலை மாற்றத்தின் தாக்கமே இந்த நிலைக்கு உடனடி காரணமாகும். இதன்படி பருப்பு விலை 20 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் வெங்காயத்தின் விலையும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளின் அதிரடி திட்டம் – AI தொழில்நுட்பத்தை சேர்க்க நடவடிக்கை

  • September 3, 2023
  • 0 Comments

கூகுள் நிறுவனம் தன்னுடைய தேடுபொறி அம்சத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சேர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இதை முதற்கட்டமாக சோதனை ஓட்டமாக செய்து பார்க்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சத்தின் மூலம் கூகுளில் எதை நாம் தேடும்போதும், ஜெனரேட்டிவ் AI பயன்படுத்தி பதிலளிக்கும் வசதி வழங்கப்படும். முதற்கட்டமாக இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வழங்கப்படுகிறது. கூகுளின் அறிக்கையின்படி, நீங்கள் இதைப் பயன்படுத்துவது மூலம், நினைத்துப் பார்க்க முடியாத வகையான பதில்கள் கிடைக்கும் என அந்நிறுவனம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – நாளை முதல் அமுலாகும் எச்சரிக்கை

  • September 3, 2023
  • 0 Comments

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 03 வருடங்களின் பின்னர் வசந்த காலத்தில் தீ எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். தற்போதைய நிலவரப்படி, காட்டுத் தீ பரவத் தொடங்கினால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என குயின்ஸ்லாந்து பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. எனவே, எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. காட்டுத் தீ அபாயப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து […]

வட அமெரிக்கா

தலை முடியால் உலகச் சாதனை படைத்த அமெரிக்கப் பெண்

  • September 3, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தமது தலையின் பின்புறத்தில் ஆக நீளமான முடி வளர்த்து பெண் ஒருவர் உலகச் சாதனை படைத்துள்ளார். தலையின் பின்புறத்தில் மட்டும் சற்று நீளமாக முடி வளர்க்கும் முல்லட் என்ற சிகை அலங்காரத்தின் ஊடாகவே அவர் சாதனை படைத்துள்ளார். தலையின் மற்ற பகுதிகளில் முடி கட்டையாகவே இருக்கும். டென்னசீ (Tennessee) மாநிலத்தைச் சேர்ந்த டாமி மனிஸின் (Tami Manis) முல்லட் சுமார் 172 சென்டிமீட்டர் நீளம். அது கிட்டத்தட்ட சராசரி நபரின் உயரமாகும்.. தாதியாகப் பணிபுரியும் மனிஸ் […]

இலங்கை

இலங்கைக்கு கிடைத்த கௌரவம்!

  • September 3, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆளுநர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். உலக ‘ஏ’ தர மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேர் பட்டியலில் அவர் பெயரிடப்பட்டுள்ளார். நியூயோர்க்கை தளமாகக் கொண்ட “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை” வருடாந்தம் நடத்தும் கணக்கெடுப்பின்படி, ‘ஏ’ தர மத்திய வங்கி ஆளுநர்களில் கலாநிதி நந்தலால் வீரசிங்க சேர்க்கப்பட்டுள்ளார். 1994 ஆம் ஆண்டு முதல், “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை”, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி […]

ஆசியா

சிங்கப்பூரில் சாதனை படைத்த தமிழருக்கு அமெரிக்கா வாழ்த்து

  • September 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் 9ஆவது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் சிங்கப்பூரும் பரஸ்பர மரியாதை, பொதுவான நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட, வலுவான உறவைக் கொண்டிருக்கின்றன என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் Matthew Miller வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அதற்காக தர்மனுடனும் சிங்கப்பூர் மக்களுடனும் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூருக்கு இடையிலான […]

உலகம்

பிரான்ஸில் நபருக்கு கிடைத்த அதிஷ்டம் – ஒரே இரவில் கிடைத்த 109 மில்லியன் யூரோக்கள்

  • September 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நபர் ஒருவர் 109 மில்லியன் யூரோக்கள் பெரும்பணத்தை வெற்றியீட்டியுள்ளார். இந்த வாரம் இடம்பெற்ற EuroMillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் பிரெஞ்சு நபர் ஒருவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த குலுக்கலில் 35, 3, 37, 5, 4 ஆகிய இலக்கங்களும், நட்சத்திர இலக்கமாக 5 மற்றும் 6 ஆகிய இலக்கக்கங்களை கொண்ட சீட்டுக்கு அதிஷ்ட்டத் தொகை கிடைத்துள்ளது. மேற்படி அதிஷ்ட்டச்சீட்டினை கொண்டுள்ளவர் அடுத்து வரும் 60 நாட்களுக்குள் தனக்கான வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் […]