இலங்கை

உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனத்தில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

  • September 3, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபார் ஷிப்பிங்’ இலங்கை பயிற்சி பெற்ற கடற்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ‘ஃபார் ஷிப்பிங்’ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யு யோங் ஜுன் உட்பட குழுவொன்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நேற்று (02.09) சந்தித்து இது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பயிற்சி பெற்ற இளம் மாலுமிகள் […]

இலங்கை

நாடளாவிய ரீதியில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் சினோபெக் நிறுவனம்!

  • September 3, 2023
  • 0 Comments

கடந்த வாரம் மத்தேகொடையில் தமது முதலாவது எரிபொருள் நிலையத்தை நிறுவிய சினோபெக் எரிபொருள் நிறுவனம், செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம், டீலர்ஷிப்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், வர்த்தக முத்திரை மற்றும் நாடளாவிய செயல்பாடுகளை தொடங்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி ஹம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டை சினோபெக் சுத்திகரிப்பு நிலையத்தின் […]

இலங்கை

மன்னாரில் முஸ்லீம் இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு

  • September 3, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்ட அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முஸ்லீம் இளைஞர் யுவதிகளுக்கு தலைமத்துவ பயிற்சி வழங்கும் முகமாகவும் சமூக மட்ட பிரச்சினைகளுக்கு எதிராக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான விசேட பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(3) அகில இலங்கை முஸ்லீம் லீக் முன்னனிகளின் சம்மேளத்தின் தேசிய தலைவர் ஜனாப் லுக்மான் சஹாப்தீன் தலைமையில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் குற்றச் […]

இலங்கை

அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 26 வரை நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 78வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்ற உள்ளார். செப்டம்பர் 21 அன்று. பன்முகத்தன்மை கொண்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் முன்னேற்றத்தை முன்னேற்றுவதற்கான வழிகளைத் தேடவும் இந்த மாநாடு உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைத்து நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்காக நியூயார்க் செல்வதற்கு முன், செப்டம்பர் […]

பொழுதுபோக்கு

ரஜினிக்கு ஆளுநர் பதவி? வெளியான உறுதியான அறிவிப்பு?

  • September 3, 2023
  • 0 Comments

ரஜினிக்கு ஆளுநர் பதவியா என்ற கேள்விக்கு அவரது சகோதரர் அளித்த பதிலை வைத்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார். ஜெய்லர் படம் ரிலீஸுக்கு ஒருநாள் முன்பு இமயமலை சென்ற ரஜினி அங்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு சில சந்திப்புகளை நிகழ்த்தினார். அதன்படி ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எம்.எல்.ஏ ராஜா பையா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் […]

இலங்கை

கனமழை குறித்து நான்காவது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

  • September 3, 2023
  • 0 Comments

கனமழை குறித்து நான்காவது எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் 1 மணி முதல் நாளை (04.09) காலை 8.30 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் […]

இந்தியா

பிரக்யான் ரோவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • September 3, 2023
  • 0 Comments

சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் சந்திரனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ‘பிரக்யான்’ ரோவர் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரோவருக்கான திட்டமிடப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், அது உறக்கநிலையில் உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிரக்யான் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு நேரம் தொடங்கியதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.  பிரக்யான் ரோவரின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு சூரிய சக்தி அவசியம். சந்திரனின் அடுத்த சூரிய உதயம் செப்டம்பர் 22 அன்று ஆரம்பமாகும். அதன் […]

இலங்கை

திருகோணமலையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான முச்சக்ரவண்டி – இளம் குடும்பஸ்தர் பலி!

  • September 3, 2023
  • 0 Comments

திருகோணமலை- வெருகல் – பூநகர் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச்சம்பவம் இன்றையதினம் (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஒன்றை ஏற்றிச் சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியை […]

பொழுதுபோக்கு

தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ…. தெறிக்கவிடும் புதிய செய்தி…

  • September 3, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் திகதி வெளியாகிறது. லியோ ரிலீஸுக்கு முன்பே தளபதி 68 படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிஸியாகிவிட்டார் விஜய். தளபதி 68 படத்துக்காக விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் யுவன் சங்கர் ராஜா தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங் வேலைகளில் வெறித்தனம் காட்டி வருகிறாராம். விஜய், வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்காவில் சம்பவம் […]

தென் அமெரிக்கா

பிளாஸ்டிக் சர்ஜரியால் பிரபல அர்ஜெண்டினா நடிகை உயிரிழப்பு!

  • September 3, 2023
  • 0 Comments

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா(43). தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்து வந்த சில்வினா லூனா, கடந்த 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வாரத்திற்கு சுமார் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த […]