இலங்கை சபாநாயகருக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி வாழ்த்து!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே ப்ரான்ச்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பிலே ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே ப்ரான்ச்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊழலை தடுப்பதற்கும், பாதீட்டு அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை புதிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]