இலங்கை

முன்னறிவிப்பு இன்றி விடுப்பு எடுக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

  • September 6, 2023
  • 0 Comments

முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06.09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வைத்திய நிபுணர் விடுப்பு எடுத்ததன் காரணமாக பல சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மகன் – பல வருடங்களாக காத்திருக்கும் தந்தையின் கோரிக்கை

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தையார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தார். கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தந்தையார் சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

இலங்கை

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் இருந்து விலக்கு!

  • September 6, 2023
  • 0 Comments

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்ளூர் நெல் உற்பத்திக்கும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து (SSCL) விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (06.09) டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். குறித்த பதவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  பிப்ரவரி 2023 இல், நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு,  வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை திருத்த அமைச்சரவை […]

இலங்கை

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று!

  • September 6, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (06.09) விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவகாரம் குறித்து வரும் 08 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், 08 ஆம் திகதி பின்நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். நாட்டின் சுகாதாரத்துறை சமீபகாலமாக அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி, அரச அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து மருந்து […]

இலங்கை

மன்னாரை அச்சுறுத்திய கொள்ளையர்கள் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • September 6, 2023
  • 0 Comments

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு […]

இலங்கை

முல்லைத்தீவில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே உயிரிழந்த இரு இளைஞர்கள்

  • September 6, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் வீதியில் நின்ற உழவியந்திரத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இது இளைஞர்கள் உழவியந்திர பெட்டியுடன் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்கள். விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார்கள் உடலம் ஒட்டி சுட்டான் பொலிசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது முள்ளியவளை பொன்னகர் […]

பொழுதுபோக்கு

“இதுதான் காரணம்” பளிச் பதில் கொடுத்த நடிகை கௌசல்யா

  • September 6, 2023
  • 0 Comments

90’ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தான் ஏன் 40 வயதை கடந்தும் திருமணம் செய்யவில்லை என்ற உண்மையை கூறியுள்ளார். சினிமா மற்றும் சீரியல்களில் கொடி கட்டி பறந்த இவர் சில ஆண்டுகளிலேயே நடிப்பிற்கு குட் பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். இந்த நிலையில் தான் ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் […]

உலகம்

குழந்தை ஆணா பெண்ணா தெரிவிக்க வந்த விமானம் – இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

  • September 6, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளச் சிறிய விருந்துக்கு ஒரு தம்பதியர் ஏற்பாடு செய்திருந்தனர். இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், இளஞ்சிவப்புப் புகையை வெளியேற்றியபடி விமானம் தம்பதியையும் விருந்தினர்களையும் கடந்து செல்கிறது. பிறகு அதன் இடப் பக்க இறக்கை செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளானது. மருத்துவமனைக்குச் சென்றவுடன் விமானி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது. அவரது பெயர் தெரிவிக்கப்படவில்லை.விபத்துக்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை. விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பா

மால்டோவாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வருபவர்களுக்கு வெளியான தகவல்

  • September 6, 2023
  • 0 Comments

மால்டோவாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வருபவர்கள் தங்கள் நாட்டில் உள்ள அதே விலை நிலைமைகளின் கீழ் தங்கள் கையடக்க தொலைபேசிகளை விரைவில் பயன்படுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்-மால்டோவா அசோசியேஷன் உடன்படிக்கையில் தொலைபேசி அழைப்புகள இணைப்பதற்கான முன்மொழிவு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அனைத்து படிகளும் முடிந்ததும், மால்டோவான்களைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பயணிகளும் மால்டோவாவை அடையும் போது அதே உரிமைகளால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஆணையத்தின் கூற்றுப்படி, மால்டோவாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் […]

இலங்கை

பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்!

  • September 6, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வினவிய போது சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.