இலங்கை

உயர்தர பரீட்சை முடிவுகளும் கிழக்கு மாகாண மூதூர் வலயத்திற்கு கிடைத்த கெளரவமும்!

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில் உள்ள 17 கல்வி வலயங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் மூதூர் வலயமானது முதலாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூதூர் வலயத்தில் இருந்து 617 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 512 மாணவர்கள் சித்தியடைந்திருந்தார்கள் இது 83 வீதமான சித்தியாகும். 78.8 வீதமான சித்தியினைப் பெற்று கிண்ணியா வலயமானது […]

இலங்கை

இலங்கையின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை  மற்றும் காலி ஆகிய 05 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழைவீழ்ச்சியானது 100 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு ஏற்படுவது தொடர்பிலான அறிகுறிகள் குறித்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

உடலுறவு பற்றி ஓப்பனாக பேசிய சிம்பு பட ஹீரோயின்….

  • September 6, 2023
  • 0 Comments

தமிழில் நடிகர் அர்ஜின் நடித்து வெளியான மதராசி படத்தின் மூலம் அறிமுகமாகி ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. மேலும் சிம்புவுடன் இவர் நடித்த காளை படம் வெகுவாக ரசிக்கத்தக்கதாக இருந்தது. தமிழ், தெலுங்கு என்று நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக காவியத்தலைவன் படத்தில் நடித்து விட்டு வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். கிளாமராக நடித்தும், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படத்தையும் பகிர்ந்து வரும் வேதிகா உடலுறவு குறித்த […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசை திருப்ப முயற்சி – பிள்ளையான்!

  • September 6, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே ‘செனல்-4’ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்யைான் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காணொலியில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் அவர் மறுத்துள்ள அவர் அத்தகைய சூழ்நிலையை மீளவும் உருவாக்குகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். செனல்-04 வெளியிட்டுள்ள காணொலி குறித்து இன்று (06.09) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தன்னுடன் […]

இலங்கை

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என்று மக்கள் நினைப்பது நியாயமானதே!

  • September 6, 2023
  • 0 Comments

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாப்பதில் மட்டும் ஈடுபடும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள் நினைப்பது நியாயமானதே என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்றை (06.09) அமர்வில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுகாதார அமைச்சருக்கும், தமக்கம் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது எனவும், சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள […]

இலங்கை

நெல் வயல் ஒன்றின் நடுவில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!

  • September 6, 2023
  • 0 Comments

நிகவெரட்டிய நகர் பகுதியை அண்மித்த நெல் வயல் ஒன்றின் நடுவில் இருந்து நிர்வாணமாக காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ஒன்று புதன்கிழமை (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 40 – 45 மதிக்கத்தக்க வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு நிர்வாணமாக காணப்பட்டதுடன், அந்த சடலம் யாருடையது என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த சடலம் வெளிப் பிரதேசத்தில் இருந்து கொலை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு குறித்த […]

ஆசியா

பாகிஸ்தானில் மதபோதகர் மீது துப்பாக்கிச்சூடு..!

  • September 6, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா தாசில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் மதபோதகராக செயல்பட்டு வருபவர் எலேசர் விக்கி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டு தலத்திற்கு […]

ஐரோப்பா

வாக்னர்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவுள்ள பிரித்தானியா

  • September 6, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது என்பது சட்டவிரோதமானது என கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையை வன்முறையை தூண்டும் அழிவுகரமான அமைப்பு என குறிப்பிட்டுள்ள உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன், ரஷ்யாவின் வெறும் ஒரு ராணுவ கருவி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனிலும் ஆப்பிரிக்காவிலும் அதன் செயற்பாடுகள் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் சுயெல்லா பிரேவர்மேன் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் […]

இலங்கை

இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்!

  • September 6, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். கோப் குழு நேற்று (05.09) கூடிய நிலையில், இதன் முன் முன்னிலையான அதிகாரிகள் மேற்படி தெரிவித்துள்ளனர். இதன்போது கோதுமை மா மற்றும்  ஓடு தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய இரட்டைக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு எவ்வளவு காலம் இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று பொது நிதிக் குழு (COPF) கேள்வி எழுப்பியது. அதற்கு […]

இலங்கை

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!

  • September 6, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாக மின் பாவணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பிரேணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கோருவதாக அந்த சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக கேட்டுக்கொண்டுள்ளார். IMF இன் நிபந்தணைகளுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய முன்னதாக ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிக்க முயற்சித்தும், பின்னர் அது […]