விளையாட்டு

Asia Cup – பாகிஸ்தான் அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

  • September 6, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம் மோதுகின்றன. இப்போடியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர். ஹசன் (0) ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி […]

இலங்கை

பொறியியற் தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி!

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் ஏற்கனவே இவரது சகோதரிகள் இருவர் இதே துறையில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றவர்கள் என்பதும் […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்!புலனாய்வாளர்களின் அத்துமீறிய செயற்பாடு- வேடிக்கை பார்த்த பொலிசார்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06) இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையின்போது குறித்த பகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு […]

இலங்கை

திருகோணமலையில் புலம்பெயர் தமிழரொருவரின் சமூகப்பணி!

திருகோணமலை மாவட்டத்தில் விளையாட்டு மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் தன்னார்வ அமைப்பொன்று செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் வசித்து வரும் திருகோணமலைமைச் சேர்ந்த மனோதீபன் என்பவர் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டின் மூலம் இன நல்லுறவை வலுவூட்டும் விதத்தில் பல விளையாட்டு போட்டிகளை நடாக்கி வருவதாகவும் தெரியவருகின்றது. மனோதீபன் பவுண்டேஷன் என்ற பெயரில் மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக விளையாட்டு ,கல்வி மேம்பாட்டு வேலை திட்டங்கள் மற்றும் வறுமையில் வாழும் பெண்கள் தலைமை […]

தமிழ்நாடு

தாய், பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை… காதலனுடன் மாணவி உல்லாசம்!

  • September 6, 2023
  • 0 Comments

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மன்னார்குடி வாலிபர் சிறுமியை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இது சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் வாலிபரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் முகப்பேர் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் வைத்து சிறுமியின் காதலனை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். […]

இலங்கை

மின்சார சபையில் ஊழியர்களை குறைக்க வேண்டி வரும் – காஞ்சன!

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத் திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த ஊழியர்களை குறைக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறிய அவர்,  சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உலகம்

கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி! அப்படி என்ன செய்தது?

ஒரு கோழியின் ஆயுட்காலம் பொதுவாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இருக்கும். சில நேரங்களில், வெவ்வேறு இனங்கள் மற்றும் பிற காரணிகளால் ஆயுட்காலம் மாறுபடலாம். உலகின் மிகப் பழமையான கோழி 20 வயது 272 நாட்களை எட்டியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த தம்பதியினர், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுடன் பண்ணை வைத்துள்ளனர். இதில், பீனட் என்ற கோழி, வாழும் கோழி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. கோழியின் உரிமையாளர் மார்சி பார்க்கர் […]

ஐரோப்பா

கிரீஸில் காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி!( வீடியோ)

  • September 6, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டின் வடக்கே சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டது. பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 20க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த சூழலில், பெலியான் […]

பொழுதுபோக்கு

தளபதி 68-இல் இணையும் டாப் ஸ்டார்… கம் பெக் கொடுக்க தயாராகும் பிரசாந்த்?

  • September 6, 2023
  • 0 Comments

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு, தளபதி 68 படத்துக்காக பிரசாந்த் இறங்கி வந்தே ஆக வேண்டும் என ஒரு ஃபிளாஷ்பேக் ஸ்டோரி கூறியுள்ளார். தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தளபதி 68 […]

ஐரோப்பா

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ட்ரோன் தாக்குதல் – 16 பேர் உயிரிழப்பு!

  • September 6, 2023
  • 0 Comments

கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியன்டினிவ்கா நகரில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய படையினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். போர்க்களத்திற்கு அருகாமையில் உள்ள தொழில் நகரத்தில் இந்த  தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய அதிகாரிகள் டெலிகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவினுடைய  தீமை கூடிய விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும் என Zelenskiy கூறினார். இது […]