உலகம்

ஒடிசா ரயில் விபத்தில் தொடரும் சோகம்!

புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் இன்னும் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் திணறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மோதிக் கொண்டதில் 278 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் முழுமையடைந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. தற்போது அந்தத் தடத்தில் […]

உலகம்

அமெரிக்காவில் மோசமடைந்து வரும் காற்றின் தரம் : மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 7, 2023
  • 0 Comments

கனேடிய காட்டுத்தீயின் புகை வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் பரவி வருவதால் நியூயார்க்கில் உள்ள மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கனேடிய காட்டுத்தீயின் புகை முக்கிய இடங்களை மறைப்பதால், நியூயார்க் காற்றின் தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, மாநிலத்தில் காற்றின் தரம் இப்போது “ஆரோக்கியமற்றதாக” உள்ளது. மேலும் லிபர்ட்டி சிலை மற்றும் டைம்ஸ் சதுக்கம் போன்ற அடையாளங்களில் இருண்ட மூடுபனி இறங்கியுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வழக்கத்திற்கு மாறாக 150 இற்கும் […]

இந்தியா

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

  • June 7, 2023
  • 0 Comments

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரவுடிகளில் ஒருவரான சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் பாஜக தலைவர் பிராம் தத் திவேதி கொலை வழக்கிலும் சஞ்சீவ் ஜீவா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறையில் இருந்த சஞ்சீவ் ஜீவா, […]

இலங்கை

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (06) […]

இலங்கை

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைவந்த இருவருக்கு குரங்கு காய்ச்சல்!

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாய் மற்றும் மகளுக்கே இவ்வாறு குரங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவா்கள் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவா்தன தொிவித்துள்ளாா். தந்தைக்கு வௌிநாட்டில் monkeypox தொற்று உறுதியாகி குணமடைந்த பின்னர் நாட்டுக்கு வந்துள்ளமை தொியவந்துள்ளது. இந்நிலையில் தாய் மற்றும் மகளும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக […]

பொழுதுபோக்கு விளையாட்டு

“LPL season-4” அதிரடியாக களமிறங்கினார் சுபாஸ்கரன்

  • June 7, 2023
  • 0 Comments

LPL நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகனை Lycaவின் Jaffna Kings உரிமையாளரான அல்லிராஜா சுபாஸ்கரன் கொழும்பில் நேரில் சந்தித்துள்ளார். இதன்போது 2023ஆம் ஆண்டுக்கான LPL தொடருக்கு தமது ஆதரவை சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார். 2021 இல், அவர் லங்கா பிரீமியர் லீக்கின் Jaffna Kings உரிமையை வாங்கியதுடன், அன்றிலிருந்து LPL தொடரில் முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறார். லங்கா பிரீமியர் லீக்கில் 3 சீசன்களிலும் லீக்கை வென்றதன் மூலம் Jaffna Kings மிகவும் வெற்றிகரமான […]

ஐரோப்பா

பிஏ மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்திய கும்பல் பேச்சுவார்த்தை நடத்த காலக்கெடு விதித்துள்ளது!

  • June 7, 2023
  • 0 Comments

பிஏ மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் கும்பல் தங்களால் ஹேக் செய்யப்பட்ட தகவல்களை ஆன்லைனில் வெளியிட காலக்கெடுவை விதித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஏ மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தகவல்களை ரஷ்யக் குழுவானது  ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. குறித்த குழுவானது  க்ளோப், MOVEit என்ற மென்பொருள் ஹேக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டார்க் வெப்பில் அறிவிப்பை வெளியிட்டது. வங்கி மற்றும் தொடர்பு விவரங்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட […]

இந்தியா

33 ஆண்டுக்கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது. 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சென்னையில் முக்கிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னை, செம்மொழி பூங்கவுக்கு எதிரே உள்ள மதிப்பு வாய்ந்த 115 ஏக்கர் கிரவுண்ட் நிலத்தை அரசு […]

ஐரோப்பா

தன் கோரமுகத்தை மீண்டும் நிரூபித்துள்ளது ரஷ்யா -ஜெலன்ஸ்கி கண்டனம்

  • June 7, 2023
  • 0 Comments

ரஷ்ய பயங்கரவாதிகள் தங்கள் அச்சுறுத்தலை மீண்டும் நிரூபித்துள்ளனர் என நீர்மின் நிலைய அணை அழிப்பினை குறிப்பிட்டு ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் ககோவ்கா அணையில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கம் நகரின் பல்வேறு பகுதிகளை பாதித்தது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அணை உடைப்பு ரஷ்யாவின் நாசவேலை என குற்றம்சாட்டினார்.மேலும் அவர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவை கண்டித்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடுமையாக […]

இந்தியா ஐரோப்பா

ரஷ்யாவில் ஏர் இந்திய விமானம் ; உணவு , மருந்து வசதியின்றி பயணிகள் தவிப்பு

  • June 7, 2023
  • 0 Comments

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். இந்நிலையில், விமானத்தில் என்ஜின்களில் ஒன்று நேற்று திடீரென பழுதடைந்து உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் […]

You cannot copy content of this page

Skip to content