வட அமெரிக்கா

16 ஆண்டுகளுக்கு மேலாக தனியையில் இருந்த முதலை.. முட்டைகளை இட்ட சம்பவம்

  • June 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உயிரியல் பூங்கா ஒன்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை பார்த்தீனோஜெனிசிஸ் அல்லது கன்னி பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. ராஜ நாகம்,வேளான் மீன், கலிபோர்னியா காண்டோர் கழுகுகள் போன்றவற்றில் பார்த்தீனோஜெனிசிஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தாலும், முதலை இனங்களில் முதல் கன்னி பிறப்பு இதுதான் என பயாலஜி வெண்ணர்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. கன்னிப்பிறப்பு தன்மை கொண்ட […]

உலகம்

வெடித்து சிதறிய அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை..!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்து எரிமலைக் குழம்புகளை கக்கி வருகிறது. உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை 2019 இல் வெடித்தபோது, ​​அதிக சேதம் ஏற்பட்டதுடன் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இறுதியாக, கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்தது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக எரிமலையின் பகுதி முழுவதும் தீப்பிழம்பு போல் காட்சியளிக்கிறது.

இலங்கை

55 வயதான காதலியின் நகைகளை திருடிய 28 வயது காதலன்

55 வயது காதலியிடம் தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், நிதி நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரியும் காதலன், அந்த பெண்ணுடன் பல ஆண்டுகளாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது . மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக விசாரணையில்,தெரியவந்த தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் […]

ஐரோப்பா

மனித குலத்தின் இருப்பை முடிவுக்கு கொண்டுவரும் அணுவாயுதம் : ரஷ்யா எச்சரிக்கை!

  • June 8, 2023
  • 0 Comments

மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கினால், அது பூமியில்  மனிதகுலத்தின் இருப்பை முடிவுக்கு கொண்டுவரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. மொஸ்கோவில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா இவ்வாறு கூறினார். இதன்போது  ரஷ்யா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்குவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அவர்களின் பைத்தியக்காரத்தனம் அல்லது பைத்தியக்காரத்தனத்தை கட்டுப்படுத்துவது பற்றி நாம் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்? இது எங்கள் தலைப்பு […]

இந்தியா

ரஷ்யாவில் தவித்த பயணிகளுடன் மீண்டும் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா

  • June 8, 2023
  • 0 Comments

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி கடந்த செவ்வாய் கிழமை ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் புறப்பட்டு சென்றது.விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். நடுவானில் திடீரென விமான என்ஜின்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது. இதனால், ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது. ரஷ்யாவில் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு […]

ஐரோப்பா

நோவா ககோவ்கா அணை உடைந்ததில் ஐவர் பலி!

  • June 8, 2023
  • 0 Comments

நோவா ககோவ்கா அணை உடைந்ததில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவால் நிறுவப்பட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். நேற்று (07) மூவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையையும் சேர்ந்துதான் ரஷ்ய பிரதிநிதி அறிவித்துள்ளாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் ஐவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணை வெடிப்பினால் ஏற்பட்ட அழிவின் முழு அளவு மெல்ல மெல்ல தெளிவாகத் தெரிகிறது. இதன்படி  14,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளை மேற்கோள் காட்டி சுமார் 4,300 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் […]

பொழுதுபோக்கு

லியோ படத்தில் விக்ரம் படக்குழு!! இதுக்கு மேல என்ன வேணும்?

  • June 8, 2023
  • 0 Comments

விஜய்யின் 67வது படமான லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், தியேட்டர், ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் என ப்ரீ தியேட்டர் ரிலீஸ் பிசினஸ் தாறுமாறாக சம்பவம் செய்து வருகிறதாம். மாநாடு, கைதி, மாஸ்டர், விக்ரம் என மேக்கிங்கில் மிரட்டிய லோகேஷ் லியோவிலும் தனது ஸ்டைலில் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் படம் லோகேஷின் LCU […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : முதற்கட்ட சிகிக்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!

  • June 8, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த இலக்கை விட அதிகரித்துள்ள நிலையில், சிக்சைக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி நோயாளிகள் சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்த பிறகும், முதல் சிகிச்சைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. NHS இன் சமீபத்திய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், மக்கள் தொகையில் 9.5 வீதமானோர் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இது நிர்ணயித்த இலக்கை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் […]

இலங்கை

எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைவடையும் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

  • June 8, 2023
  • 0 Comments

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (08) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால்,  வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாகவும் அமைச்சர் இதன்போது […]

இலங்கை

தமிழ் MPக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்

  • June 8, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த மே மாதம் நடந்த பேச்சுக்களில் எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் இடம்பெறாத நிலையில் இன்றைய பேச்சுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இரு நாட்கள் பேச்சு நடந்தது. முதல் நாளில் காணி விடுவிப்பு, தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, அரசியல் […]

You cannot copy content of this page

Skip to content