இலங்கை

இலங்கை வந்த சீனப் பிரஜை நாடு கடத்தல்!

  • June 9, 2023
  • 0 Comments

இலங்கை வந்த சீனப் பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கினி ராஜ்ஜியத்தின் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் அண்மையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார் இதனையடுத்து, அவர் […]

ஐரோப்பா

உக்ரைனில் அணை தகர்ப்பு – நீரில் மிதக்கும் கண்ணிவெடிகளால் அச்சத்தில் மக்கள்

  • June 9, 2023
  • 0 Comments

உக்ரைனின் கேர்சன் நகரில் நொவா கவோவ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்ணிவெடிகள் ஆபத்து உருவாகியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது. கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என செஞ்சிலுவை அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார். முன்னர் கண்ணிவெடிகள் எங்கு உள்ளன என எங்களிற்கு தெரிந்திருந்தது அணை தகர்ப்பிற்கு பின்னர் அவை எங்குள்ளன என்பது தெரியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஸ்யா கைப்பற்றிய பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலகண்ணிவெடிகள் மிதக்கும் கண்ணிவெடிகளாக மாறியுள்ளன […]

வாழ்வியல்

நகங்களுக்கு கவனிப்பு தேவை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

  • June 9, 2023
  • 0 Comments

நம்மில் சிலர் நகங்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்துவர். இந்நிலையில், உங்கள் நகங்களுக்கு கவனிப்பு தேவையா என்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள் உள்ளன. உடையக்கூடிய அல்லது பலவீனமான நகங்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதனை பற்றி சில விஷயங்கள் இங்கே பார்க்கலாம்… உங்கள் நகங்கள் எளிதில் உடையக்கூடியதாக இருந்தால், அதற்கு மிகவும் கவனம் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எளிதில் உடையக்கூடிய நகங்கள் பல்வேறு காரணஙங்களால் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய சீனா

  • June 9, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய பழங்களின் இறக்குமதியை இடைநிறுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. ஏறக்குறைய 02 வருடங்களாக நடைமுறையில் இருந்த அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பழ உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு நிம்மதி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி உள்ளிட்ட பல வகையான பழங்களை சீனாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் வைரஸின் தோற்றத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்ததால் சீனாவுடனான […]

இலங்கை

யாழில் இளைஞன் மரணம் – விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

  • June 9, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்தமையால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் எனவும் , ஏற்கனவே போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை தண்டனை […]

இலங்கை

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை!

  • June 9, 2023
  • 0 Comments

வெளிநாட்டுசுற்றுலாப்பயணிகள் ஆக்ரோசமான யானையொன்றை எதிர்கொண்டு மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலனறுவ தேசிய பூங்காவிற்கு சென்ற பயணிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியொன்றில் பயணம் செய்த சுற்றுலாப்பயணிகளே யானையை அருகில் எதிர்கொண்டுள்ளனர். யானையால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள் அதற்கு அருகில் சென்று படம் பிடிக்க முயல்வதையும் தீடிரென சீற்றமடைந்த யானை அவர்களை நோக்கி வேகமாக வருவதையும் முச்சக்கர வண்டிகளை தலைகீழாக புரட்டிப்போடுவதையும் வெளியாகியுள்ள வீடியோக்கள் காண்பித்துள்ளன. முச்சக்கரவண்டியொன்றிற்குள் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் சிறிய காயங்களுடன் […]

ஐரோப்பா

துருக்கி ஜனாதிபதிக்கு மீசை வரைந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • June 9, 2023
  • 0 Comments

துருக்கி ஜனாதிபதி எர்கோடன் புகைப்படத்தின் மீது மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி ஜனாதிபதி எர்கோடன் மூன்றாவது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி எர்கோடன் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை துருக்கி ஜனாதிபதி எர்கோடனுக்கு வரைந்துள்ளார். மேலும் அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 19 வயது இளைஞனுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்

  • June 9, 2023
  • 0 Comments

ஜெர்மனி ஹனோவர் நகரத்தில் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனியின் ஹனோவர் பிரதேசத்தின் வீதியில் சென்று கொண்டு இருந்த வாகனத்தை பொலிஸார் சோதணையிட முயற்சித்துள்ளனர். இதன் பொழுது 19 வயதுடைய இளைஞர் ஒருவர் வாகனத்தை கொண்டு தப்பியோட முயற்சித்துள்ளார். இதன் காரணத்தினால் பொலிஸார் வாகனத்தை துரத்திய நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் 19 வயது இளைஞர் மீது சரமரியான துப்பாகி பிரயோகம் இடம் பெற்றதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞர் படுங்காயம் அடைந்த […]

ஆசியா

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் தமிழர்!

  • June 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13- ஆம் திகதியுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்கு முன்பே தேர்தலை நடத்தி சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், கடந்த மே மாதம் 29- ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கைகளுக்கான […]

வட அமெரிக்கா

கனடாவை உலுக்கிய காட்டுத்தீ – அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • June 9, 2023
  • 0 Comments

கனடாவை உலுக்கும் காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாநிலங்களில் கடுமையான காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வட அமெரிக்காவில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. நியூயோர்க் நகரில் காற்றுத் தூய்மைக்கேடு உலகின் ஆக மோசமான நிலையை எட்டியது. உயர்தர முகக்கவசங்களை அணியும்படியும் கூடுமானவரை உட்புறங்களில் இருக்கும்படியும் அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்திவருகின்றனர். விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளைப் பள்ளிகள் ரத்து செய்துவிட்டன. பிலடெல்பியா (Philadelphia) நகரில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருக்கும்படி குடியிருப்பாளர்களிடம் கூறப்பட்டது.

You cannot copy content of this page

Skip to content