இலங்கை

பிரபல ஐஸ் போதை வியாபாரி காத்தான்குடியில் கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார். அவர் இக் கைது சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி டீன் வீதி, ஜவ்பர் ஆலிம் வீதியில் குறித்த வியாபாரி ஐஸ் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5850 மில்லி கிராம் […]

உலகம்

கடும்காட்டுத் தீ தொடரும் மரணங்கள்- கஜகஸ்தானில் துயரம்

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயின் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் காட்டுத்தீயினால் அதிக மரணம் ஏற்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயினால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. வேகமாக பரவிவரும் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள், இராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என 1,000 க்கும் மேற்பட்டோர் […]

இலங்கை

கொழும்பில் பெண் ஒருவர் மீது சரிமாரியான வாள் வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை பகுதியிலுள்ள “லக்ஹிரு செவன” அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பாத்திமா ரிஸ்வான் என்ற 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். “என் சகோதரி வெட்டப்பட்டார். மலிஷா என்ற நபரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த […]

இந்தியா

இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு! மத்திய வெளியுறவு அமைச்சகம்

கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மோசடியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய மாணவர்கள் சிலர், கனடா நாட்டின் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அவ்வாறு சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள இந்திய நாட்டு தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, கனடா நாட்டு […]

பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் புற்றுநோயால் மரணம்

பிரபல இந்தி திரைப்பட நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். 1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். 78 வயதான தில்லானுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தில்லான் […]

இலங்கை

லண்டன் – பிரான்ஸ் நோக்கி பயணமாகும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, தலைவர் பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரிஸ் கிளப் இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் கடன் ஸ்திரப்படுத்தலுக்கு தனது ஆதரவை முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட அமெரிக்கா

சுருண்டு விழுந்த நபரை கேலி செய்த போலிஸ் ;370 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

  • June 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பொலிஸ் வாகனத்தில் சிறைக்கு செல்லும் வழியில் நபர் ஒருவர் சுருண்டு விழுந்து காயமடைந்த சம்பவத்தில் மாகாண நிர்வாகம் 371 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த நபர் சுருண்டு விழுந்ததும், உதவ முன்வராத பொலிஸார், அவரை கிண்டல் செய்ததுடன், காயம் பட்டதாக நடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் தற்போது Randy Cox என்ற 36 வயது நபருக்கு கனெக்டிகட் மாகாண நிர்வாகம் 45 மில்லியன் டொலர் (ரூ.371 கோடி) இழப்பீடு வழங்க […]

உலகம்

ஈரானின் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை ! வெள்ளை மாளிகை தகவல்

டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஈரான் உபகரணங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது. தற்போது இரு தரப்பிலும் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்யப் பகுதியில் டிரோன் […]

ஆசியா

ஜப்பானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • June 11, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் 140 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

You cannot copy content of this page

Skip to content