ஐரோப்பா

விமான கழிவறையில் தம்பதியரின் முகம் சுளிக்க வைக்கும் செயல்…!

  • September 13, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு கடந்த 8ம் திகதி ஈசிஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த ஒரு தம்பதியர், விமான கழிவறைக்குள் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் விமான பணிப்பெண் அங்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த பயணிகளும் அங்கு சென்றுள்ளனர். பின்னர், தயங்கி தயங்கி விமான பணிப்பெண், கழிவறையின் கதவை திறந்துள்ளார். அப்போது அங்கு கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரைகுறை ஆடையுடன் உள்ளே இருந்த தம்பதியர், […]

இலங்கை

AHRC நிறுவனத்தின் ஜனநாயக பங்குதார்ர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு

  • September 13, 2023
  • 0 Comments

ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும், மக்கள் குறைகேள் களம் ஒன்றினை இன்று (13.08.2023) ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. AHRC நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை முன்மொழிந்தும் மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு […]

இலங்கை

புகையிரத சாரதிகளை பணிக்கு திரும்புமாறு எச்சரிக்கை!

  • September 13, 2023
  • 0 Comments

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றும் (13.09) தொடர்கின்ற நிலையில், அவர்களை பணிக்கு திரும்புமாறு புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பாத சாரதிகளுக்கு அவர்கள் தங்கள் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படும் என்றும், இது குறித்த உரிய கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

லியோவிலிருந்த முக்கியமான இருவரை தட்டி தூக்கிய விடாமுயற்சி

  • September 13, 2023
  • 0 Comments

அஜித் நடிக்கவுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அபுதாபியில் தொடங்க இருப்பதாகவும் தற்போது படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை குறிப்பாக இந்த படத்தை நாயகி த்ரிஷா என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் […]

இலங்கை

மக்களே ஏமாராதீர்கள்! பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

  • September 13, 2023
  • 0 Comments

பொலிஸார் என தெரிவித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் சீருடைய அணியாத நபர்களே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பொருட்கள், வாகனங்கள், வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்வது போன்று நடித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் சோதனை அல்லது தேடுதல் […]

இலங்கை

யாழில் 50 பவுண் நகை கொள்ளை!

  • September 13, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை உடைத்து 53 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது. நல்லூர் உற்சவத்தை காண்பதற்காக குறித்த வீட்டில் இருந்தவர்கள் சென்றிருந்த நிலையில், 53 சவரன் நகை மற்றும் 100 அமெரிக்க டொலர் பணம் என்பன களவாடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

பேருந்தில் பயணித்தவருக்கு நேர்ந்த விபரீதம்!

  • September 13, 2023
  • 0 Comments

ரத்மலானை காலி வீதியில் நேற்று (செப். 12) பயணித்த பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கிசை பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நபரே மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த பயணி களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு!

  • September 13, 2023
  • 0 Comments

இலங்கையில் நடத்த உள்நாட்டு போரின்போது அவையங்களை இழந்து அங்கவீனமுற்றோர் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு உதவிதொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, அங்கவீனமுற்ற ஒருவர் 55 வயதை அடையும் முன் இறந்தால், அந்த மரணத்திற்கான காரணத்தை மருத்துவ வாரியம் உறுதிப்படுத்த வேவண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து கணிசமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய,  அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவை […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : நான்கு வருடங்களாக பல இன்னல்களை அனுபவித்தேன் – மைத்திரி!

  • September 13, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல்  குறித்து கடந்த நான்கு வருடங்களாக தன்மீது பல்வேறு குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சனல்-04 ஊடகம் வெளியிட்டுள்ள காணொலி குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் […]

இலங்கை

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதிய அவசர கடிதம்!

  • September 13, 2023
  • 0 Comments

அண்மையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் நகலைக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த ஆவணம் மார்ச் 17, 2023 அன்று அரசாங்க அரசிதழில் முன்னர் வெளியிடப்பட்ட மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பு என்பதை புரிந்து கொண்டதாக மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது. திருத்தப்பட்ட சட்டமூலத்தின் நகல் கிடைத்தவுடன் அது தொடர்பான மேலதிக அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அக்குழு  குறிப்பிட்டுள்ளது.