இலங்கை

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி: கோபா குழு தெரிவிப்பு

நாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக சிறைகளில் 259 சதவீதம் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 17,502 கைதிகள் விளக்கமறியலில் உள்ளதாகவும், 9,289 கைதிகள் தண்டனை பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். எவ்வாறாயினும், நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட […]

உலகம் ஐரோப்பா

கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய மீன்பிடிப் படகு : 78 பேர் உயிரிழப்பு!

  • June 14, 2023
  • 0 Comments

தெற்கு கிரீஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானவர்கள் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த படகில் இருந்து 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிழைத்தவர்களில், நான்கு பேர்  தாழ்வெப்பநிலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் […]

உலகம்

உக்ரைனில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி

ரஷ்யப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . உக்ரைனுக்கு எதிரான 15-மாத கால போரில் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். “ஏழு வீடுகளின் […]

பொழுதுபோக்கு

கோடிகளை கொட்டி கொடுத்தும் நடிக்க மறுத்த ராக்கி பாய்! காரணம் இதுதானா??

  • June 14, 2023
  • 0 Comments

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ், பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் ரோலில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் […]

இலங்கை

ஆசிரியை ஒருவர் கழுத்தறுத்து கொடூர கொலை

  • June 14, 2023
  • 0 Comments

ஊருபொக்க – தம்பஹல உயர்தரப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிதாரி மதுமாலி என்ற 29 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். பாடசாலையிலிருந்து பேருந்தில் வந்து இறங்கி, கிராமத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்ணை […]

உலகம்

நெதர்லாந்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்!

நெதர்லாந்தில் நீரில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடியை பூர்வீகமாக கொண்ட 21 வயதான அனுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து வந்த நபர் ஒருவர் நீரில் விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், காப்பாற்றப்பட்ட பிரான்ஸ் நபர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுசனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், […]

ஐரோப்பா வட அமெரிக்கா

ககோவ்கா அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா. சபை கருத்து

  • June 14, 2023
  • 0 Comments

உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6ம் திகதி உடைந்தது. இதனால் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின. இந்நிலையில் இந்த அணை உடைப்பின் தாக்கம் குறித்து ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறுகையில், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் […]

இந்தியா ஐரோப்பா

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை – மூவர் கைது

  • June 14, 2023
  • 0 Comments

லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற இந்திய மாணவியை உடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்த 27 வயது கொந்தம் தேஜஸ்வினி என்பவரே லண்டனில் செய்யாய்க்கிழமை கத்திக்குத்துக்கு இலக்கானவர்.தேஜஸ்வினி சம்பவயிடத்திலேயே பலியானதாக லண்டன் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு 28 வயது பெண் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர் தெரிவிக்கையில், தேஜஸ்வினி மற்றும் நண்பர்கள் […]

இந்தியா

பீகாரில் 11 வயது சிறுவனை தாக்கி கொன்ற முதலை..

  • June 14, 2023
  • 0 Comments

பீகாரில் 11 வயது சிறுவனை தாக்கி கொன்ற முதலையை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், கோகுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர தாஸ். இவர் பைக் ஒன்றை வாங்கினார். இந்த பைக்கிற்கு பூஜை செய்வதற்காக, தன் குடும்பத்தினருடன் கங்கை கரைக்குச் சென்றார்.அப்போது, தர்மேந்திர தாஸின் மனைவியும், மகனும் கங்கை நதியில் மகிழ்ச்சியாக நீராடிக் கெண்டிருந்தனர். அப்போது, தண்ணீருக்குள்ளிருந்து திடீரென வெளியே வந்த ராட்சத முதலை தர்மேந்திராவின் மகனின் காலை பிடித்து […]

தென் அமெரிக்கா

சவப்பெட்டியில் வைத்து 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி!

  • June 14, 2023
  • 0 Comments

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, சவப்பெட்டியில் நான்கு மணிநேரம் உயிருடன் இருந்தது ஈக்குவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் […]

You cannot copy content of this page

Skip to content