இலங்கை

SLMC-ன் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாந்தமருதில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

  • September 15, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றதுடன் நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு […]

இந்தியா

இந்தியாவில் லிஃப்ட் சென்ற 4 தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி

  • September 15, 2023
  • 0 Comments

இந்தியாவின் – உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள அம்ராபாலி குடியிருப்பு வளாகத்தில் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர். இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து செல்ல முற்பட்ட போதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. 4 தொழிலாளர்கள் உயிரிழந்துடன் பலர் படுகாயமடைந்தனர். தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்த போது மின்தூக்கியில் 12 பேர் இருந்ததாக […]

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணயிளவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கபட்டது இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாகதீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது. இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.-     அத்துடன் தியாக […]

ஆசியா பொழுதுபோக்கு

மார்க் ஆண்டனி படத்துல சும்மா மிரட்டியிருக்காங்க அபிநயா

  • September 15, 2023
  • 0 Comments

காது கேட்கவில்லை என்றாலும் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது நடிப்புத் திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பை பற்றி பேச வைத்து வருபவர் நடிகை அபிநயா. சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மருக்கு மனைவியாக நடித்திருப்பார். வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அபிநயா விஷால் நடிப்பில் இன்று வெளியான மார்ட் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்து அசத்தியுள்ளார். […]

இலங்கை

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது

  • September 15, 2023
  • 0 Comments

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியான விடுதலை அவர்கள் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கை

மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்.உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது இந்நிகழ்வுகள் இன்று தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய நாளில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தன் 24வது ஆண்டு வலிதீரா நினைவு மந்துவில்லில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி […]

இலங்கை

மட்டக்களப்பில் ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

  • September 15, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. பொதுச்சந்தை வீதி பட்டாபுரம் பெரியபோரதீவு பிரதேசத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா திஸவீரசிங்கம் (51) வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பல காலங்களாக மனைவி பிள்ளைகளை வீட்டு தனிமையில் தனது சகோதரியின் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணமானவரின் உறவினர் ஒருவர் இன்று […]

இலங்கை

பேருந்து விபத்தில் சிக்கி 21 மாணவர்கள் வைத்தியசாலையில்

  • September 15, 2023
  • 0 Comments

பாதுக்க – துன்னான பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன் பின்னால் வருகை தந்த பேருந்து மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இமுன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட அமெரிக்கா

ஜோபைடன் மகன் ஹன்ட்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு …

  • September 15, 2023
  • 0 Comments

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பைடனின் மகன் ஹன்ட்டர் மீது 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாகவும் கடுமையான போதைப் பொருள் மயக்கத்தில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதித்துறை சிறப்பு வழக்கறிஞர் டேவிட் வெய்ஸ் உடன் , இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹன்ட்டர் சமாதான முயற்சி மேற்கொண்டாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேசமயம் வரி ஏய்ப்பு குற்றத்தை […]

இலங்கை

யாழில் பேரூந்திலிருந்து இறங்கியவர் உயிரிழப்பு..!

  • September 15, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் என்ற 50 வயதானவரே உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.