இலங்கை

இலங்கையில் வாகனங்களின் விலை நிலைவரம் : ஆட்டோ டீலர்கள் கூறும் பதில்!

  • September 18, 2023
  • 0 Comments

இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆட்டோ டீலர்கள் குறிப்பிடுகின்றனர். பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்த போதிலும், தனியார் வாகனங்களின் இறக்குமதி முடிவுக்கு வந்துள்ளதாக ஆட்டோ டீலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

இங்கிலாந்தில் வாகன சோதனையின் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 18, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் வழக்கமான வாகன சோதனை ஒன்றின்போது, தவறான திசையின் சென்ற லொறி ஒன்றை பொலிசார் மடக்கியுள்ளனர். இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் அந்த லொறியை மடக்கிய பொலிஸார், லொறியை சோதனையிட்டுள்ளனர். அப்போது, ஒரு பெட்டிக்குள், அலுமினிய காகிதத்தில் பொதிந்துவைக்கப்பட்ட சாண்ட்விச் பாக்கெட்கள் போல சில பாக்கெட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை பிரித்துபார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று காத்திருந்தது. அவை சாண்ட்விச்கள் அல்ல. பணத்தை அலுமினிய காகிதத்தில் சுற்றி, சாண்ட்விச் போல கொண்டு சென்றுள்ளார் அவர். அத்துடன், பொலிஸார் […]

உலகம்

லிபியா மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமோர் ஆபத்து!

  • September 18, 2023
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா டெர்னா நகரவாசிகள் கண்ணிவெடி அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சுத்தமான தண்ணீரை தேடி தொலைதூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக கண்ணி வெடி அபாயத்தை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை லிபியாவில் டெர்னா அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11300 ஐக் கடந்துள்ளது.

பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷூக்கும் அனிருத்துக்கும் திருமணம்? திரையுலகில் பெரும் பரபரப்பு

  • September 18, 2023
  • 0 Comments

30 வயதான கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரைப்படத்துறையில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் நட்சத்திரமாக உயர்ந்தார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி பாடத்தின் மூலம் உண்மையான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான மதிப்புமிக்க தேசிய விருதையும் வென்றார். நடிகையாக பல சாதனைகள் செய்தாலும், கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பரபரப்பான கிசுகிசுக்கள் உள்ளன. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுடன் தற்போது கிசு கிசுக்கப்பகின்றார். ஆனால் இந்த முறை, அவரது தந்தையும், நடிகரும் தயாரிப்பாளருமான ஜி சுரேஷ் குமார், வதந்திகளுக்கு […]

இலங்கை

பம்பலப்பிட்டி- பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் மீது கத்திக்​குத்து

  • September 18, 2023
  • 0 Comments

பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருபர், உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும் சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அதிலொருவரே கத்தியால் பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார். கான்ஸ்டபிளின் வலது கை […]

உலகம்

அமெரிக்காவில் விமான விபத்து : இருவர் பலி!

  • September 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் விமான கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதன்போது இடம்பெற்ற விபத்தில் இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர். விமான கண்காட்சியின் போது இரு விமானங்கள் தரையிறங்க முற்பட்ட சமையத்தில், விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசியா

சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மீண்டும் வடகொரியாவுக்கு திரும்பிய கிம்…

  • September 18, 2023
  • 0 Comments

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. அதன்படி கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷ்யா சென்றார். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அப்போது அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர். ராணுவத்தை நவீனமயமாக்க முயற்சி இந்த பயணத்தில் அதிபர் புதின், ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ […]

இந்தியா

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்!

  • September 18, 2023
  • 0 Comments

தமிழகத்திற்கு இடம்பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி 19 மறுவாழ்வு  முகாம்களில் 15000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 79.70 மில்லியன் இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

XL  புல்லி” நாய் இனத்தை தடை செய்ய இங்கிலாந்து தீர்மானம்!

  • September 18, 2023
  • 0 Comments

“அமெரிக்கன்  XL  புல்லி” நாய் இனத்தை தடை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. நாய்கள் மிகவும் கொடூரமானவை என்றும், இதனால் மக்கள் அவதிப்படுவதாகவும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். முக்கியமாக இந்த நாய்கள் கடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  அவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு இறுதியிலிருந்து இங்கிலாந்தில் இந்த இன நாய்களின் இனப்பெருக்கத்தை தடை செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். […]

இந்தியா

ராஜஸ்தானில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

  • September 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் பட்டாச்சாரியா. இவர் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி சர்ஜூ தேவி (25). இவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது. இதனால் அந்த […]