உலகம்

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட் மேர்டொக் : பதவியில் இருந்து விலகல்

  • September 22, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய-அமெரிக்க வணிக அதிபரும் உலகின்மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவருமான ரூபர்ட் முர்டோக் Fox Corp and News Corp ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஏழு தசாப்தகாலமாக அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட்மேர்டோக் தலைமை பதவியிலிருந்து விலகும் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். பதவிவிலகுவதற்கான வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் நடுப்பகுதியில் ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குதாரர்களின் வரவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்திலிருந்து நடைமுறைக்கு வரும் ஒவ்வொரு குழுவின் […]

ஆசியா

தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே-மியுங்கிற்கு எதிராக பிடிவாரண்

  • September 22, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக லீ ஜே-மியுங் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் கடந்த 3 வாரங்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையே லீ மீது ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் அங்கு […]

இலங்கை

கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி!

  • September 22, 2023
  • 0 Comments

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று (22) இடம் பெற்றுள்ளது. இதன்போது கன்னியா-கிளிகுஞ்சுமலை நான்காவது ஒழுங்கையில் வசித்து வரும் சிவசுப்பிரமணியம் சத்தியவாசன் (22) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் வீட்டில் இருந்து 2.40 மணியளவில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.ஆனாலும் குறித்த சூட்டு சம்பவம் யாரினால் நடாத்தப்பட்டது பற்றிய விபரம் தெரியவில்லை […]

இலங்கை

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரிக்கை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

  • September 22, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) நிராகரித்தது. தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள், ஊர்தி பவனிகளை நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை பொலிசார் குறித்த மனுவை தாக்கல் செய்தனர். வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய பொலிசாருக்கு அதிகாரமுள்ளதை சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதவான், அமைதியான நினைவு நிகழ்வுகளை தடுக்க முடியாதென உத்தரவிட்டார். 1987 […]

வட அமெரிக்கா

கனடாவில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் மோசமான செயல்..!

  • September 22, 2023
  • 0 Comments

கனடாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்நிலை பாடசாலையில் கற்பித்த ரிக் வாட்கின்ஸ் என்ற ஆசிரியருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியர் பாடசாலையில் கற்ற மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்டதாகவும் குற்றவியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த ஆசிரியர் பாலியல் சீண்டல்களை மேற்கொண்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒட்டாவாவின் ஒர்லான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த சென் மெத்திவ் உயர்நிலைப் பாடசாலையில் ஆசிரியராகவும், கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாக கடமையாற்றிய […]

இலங்கை

MP எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை

  • September 22, 2023
  • 0 Comments

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (22) குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. எம்.கே.சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (22) முன்னிலையாகியபோது, குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

  • September 22, 2023
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப் பிரசுர விநியோகம் இன்று (22) மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தியும் , மன்னார் நகர பகுதியிலும் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. நேற்று (21) மற்றும் இன்றைய தினம் (22) வடக்கு தழுவிய ரீதியில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

மன்னாரில் 39 வது தேசிய மீலாதுன் நபி விழா- மீளாய்வுக் கூட்டம்

  • September 22, 2023
  • 0 Comments

மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான மீளாய்வுக் கூட்டம் இன்று (22) காலையில் நடைபெற்றது மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் நடைபெற்ற முன்னாயத்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை.பரந்தாமன் தலைமையில் இவ்விழா சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இன்றும் (22) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி […]

பொழுதுபோக்கு

ஏ.ஆர்.ரகுமான் விவகாரம்! வழக்கு பதிவு செய்த பொலிஸார்

  • September 22, 2023
  • 0 Comments

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் மீது, தற்போது கானத்தூர் பொலிஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்ட நிகழ்ச்சி ‘மறக்குமா நெஞ்சம்’. அப்போது மழை காரணமாக இந்த நிகழ்ச்சி தடைபட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மழை உட்பட எந்த காரணத்திற்காகவும் தடைபட்டு […]

இலங்கை

மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தி விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம்

  • September 22, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் ஒன்றியத்தின் அதிகாரசபையின் தலைவர் அ.ரமேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். ”பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே”, ”மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி […]