இலங்கை

யாழில் தடைகளை மீறி இரத்த தான நிகழ்வு!

  • September 23, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இவ்இதத்ததான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்றைய இரத்ததான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் கல்லூரி வளாகத்துக்குள் […]

இலங்கை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி சென்ற இளைஞன் கைது

  • September 23, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் நடுக்கடல் மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கிஷோகரன் என்ற கிஷோர்(31) என்பவரை மீட்டனர். தொடர்ந்து மண்டபம் மறுவாழ்வு […]

வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் – பாதிப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 23, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் அண்மையில் உலுக்கிய கடும் நிலநடுக்கத்தால் 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மலைப் பகுதிகளில் 2,930 கிராமங்கள் சேதமடைந்ததாக மொரோக்கோவின் வரவுசெலவுத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் Faouzi Lekjaa கூறினார். இம்மாதம் 8ஆம் திகதி 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மொரோக்கோவை உலுக்கியது. மலைப்பகுதிகளில் இருந்த பலரைச் சென்றடைவதில் சவால்கள் இருந்ததாய் அதிகாரிகள் கூறியிருந்தனர். சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 60,000 வீடுகள் சேதமடைந்தன. அவற்றுள் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான […]

ஐரோப்பா

போலந்தில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்

  • September 23, 2023
  • 0 Comments

போலந்தில் மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. போலந்து அரசாங்கமானது குறிப்பாக போலந்துடைய துணை தூதராலயங்களானது 350000 வேலை விசாக்களை சட்ட விரோதமான முறையில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறு ஆசிய ஆப்பிரக்க நபர்கள் தலா விசாக்களுக்கு 5000 யுரோக்களை வழங்கியுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது. இந்நிலையில் போலந்துடைய ஆளும் கட்சியான பிஸ் என்று சொல்லப்படுகின்ற ஆளும் கட்சியானது முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நிலைபோக்கை கொண்டிருப்பதாக வெளி உலகுக்கு காட்டியுள்ளனர். இருந்தாலும் குறிப்பாக 160000 க்கு […]

பொழுதுபோக்கு

மயோசிட்டிஸ் சிகிச்சையால் சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை… அதிர்ச்சி தகவல்

  • September 23, 2023
  • 0 Comments

திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்பும் கூட, தொடர்ந்து கதாநாயகியாக நடித்து தென்னிந்திய திரையுலகில் புது ட்ரெண்டை உருவாக்கினார் சமந்தா ரூத் பிரபு. இவரை தொடர்ந்து, தற்போது பல நடிகைகள் திருமணம் ஆன பின்னர் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். நாக சைதன்யாவை பிரிந்த சில மாதங்களில், உடலில் உள்ள தசைகளை பாதிக்கும் மயோசிட்டிஸ் எனும் பிரச்சனையால் சமந்தா பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்க கூட முடியாத நிலைக்கு சென்றார். அந்த நிலையிலும் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க இவர் டப்பிங் பணிகளை […]

ஐரோப்பா

இத்தாலி அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை – புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கட்டணம்

  • September 23, 2023
  • 0 Comments

இத்தாலியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்கான கோரிக்கை செயல்படுத்தப்படும் போது தடுப்புக்காவலை தவிர்க்க 4,938 யூரோ செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரை தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது. புதிய வரவுகளின் அதிகரிப்பு காரணமாக, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கூட்டணி இந்த வார தொடக்கத்தில் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்கு நிலுவையில் உள்ளவர்களைத் தடுத்து வைக்க நாடு முழுவதும் தடுப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கூறியது. கூடுதலாக, தடுப்புக்காவலின் காலத்தை மூன்று மாதங்களில் […]

இலங்கை

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடை – இலங்கை வெளியிட்ட அறிவிப்பு

  • September 23, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே இதனை தெரிவித்துள்ளார். இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பது நன்றாக ஞாபகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய – இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் வைத்து இலங்கை தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கும் கட்டணம்

  • September 23, 2023
  • 0 Comments

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29ஆம் திகதி முதல் சாலைக் கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். வார நாட்களில் காலை 06.30 மணி முதல் 09.30 மணி மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை வசூலிக்கப்படும் கட்டணம் 04 அமெரிக்க டொலரிலிருந்து 04.27 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆஃப்-பீக் டோல் 3.20 டொலரில் இருந்து 3.20 […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்க முடியாமல் போராடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • September 23, 2023
  • 0 Comments

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். இதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் பலரும் தோல்வியை தான் சந்திக்கின்றனர். உடல் எடையை குறைக்க, கலோரி குறைப்பு, அதிக உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவை அவசியம். உடல் எடையை குறைக்க, கலோரி குறைப்பு என்பது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. அதாவது, நாம் சாப்பிடும் கலோரிகளை விட நாம் எரிக்கும் கலோரிகள் அதிகமாக இருக்க வேண்டும். கலோரிகளை குறைக்க நாம் என்ன செய்ய […]

வட அமெரிக்கா

கனடாவில் அச்சுறுத்தலுக்கு இடமில்லை – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

  • September 23, 2023
  • 0 Comments

கனடாவில் வெறுப்பு, அத்துமீறல், அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு இடமில்லை என அறிவிக்க்பபட்டுள்ளது. கனேடிய பாதுகாப்புத் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்து சமயத்தைப் பின்பற்றும் கனடியக் குடிமக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லும் காணொளி பரவலாகிவருவதைத் தொடர்ந்து, ஒட்டாவா அதனைத் தெரிவித்தது. வெறுப்பைத் தூண்டும் அந்தக் காணொளி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடியது என்று பாதுகாப்புத் துறை X-சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. கனடியர்களுக்கும் அவர்கள் பெரிதும் மதிக்கும் பண்புகளுக்கும் அது எதிரானது என்றும் அறிக்கை தெரிவித்தது. மற்றவர்களிடம் அச்சத்தைத் […]